நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்க செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை ஜுலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது குடும்ப நல நீதிமன்றம்.

இவர்களின் திருமணம் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது, அதோடு இவர்களுக்கு வேத் என்ற ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்