என்னை கற்பழித்து விடுவார்கள் என பயந்தேன்: பிரபல நடிகை பகீர் பேட்டி

என்னை கற்பழித்து கொலை செய்து விடுவார்கள் என பயந்தேன் என பிரபல நடிகை ஒருவர் பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.

இப்படி செய்தது பிரபல அமெரிக்கா நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் தான். இவர் சென்ற வருடம் அக்டோபர் 3 ஆம் தேதி தனது பாரீஸ் வீட்டில் இருந்தார். அப்போது அவர் வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை கட்டி போட்டு வீட்டிலிருந்த பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர், இதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து கிம் கர்தாஷியன் முதல் முறையாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், வீட்டில் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவன் என் கை, கால், வாய் ஆகியவைகளை கட்டி போட்டு கட்டில் அருகில் தள்ளினான்.

அதனால் அவன் என்னை கற்பழித்து பின்னர் வைத்திருந்த துப்பாக்கியால் என்னை சுட்டு விடுவான் என நினைத்து பயந்தேன்.

நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை என தனது திகில் அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்