வேலூரில் மீத்தேன் திட்ட ஆய்வு: தமிழகத்தையே மயானக் கிடங்காக மாற்றப் போகும் மத்திய அரசு

தமிழகத்தில் தற்போது பெரும் புரட்சியாக மாறிவருவது ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எடுக்கும் திட்டம் தான்.

இந்த திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால், தமிழக விவசாய நிலங்கள் எல்லாம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக கடந்த 13 நாளாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையை அடுத்த வேலூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் இந்த மீத்தேன் எடுப்பதற்காக ஆய்வு நடத்தப்பட்டு குறியிட்டு வைத்துள்ள இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், அங்கு மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த தயாராவதாகவும் அந்தப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த திடீர் ஆய்வு நடத்தப்பட்டது, தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை தூண்டிவிட்டு தமிழகத்தையே தத்தளிக்க வைப்பதற்காக தான் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.