கமல் ஒரு குடிகாரன் :மாணவ பொறுக்கிகளை கெடுக்கிறான் : சு.சாமி பகீர்

நடிகர் கமல்ஹாசனுக்கும், அரசியல் தலைவர் சுப்ரமணிய சாமிக்கும் ஜல்லிக்கட்டு போராடம் தொடங்கியது. அவர்களுக்கு இடையே ஏற்பட்ட ட்விட்டர் போராட்டம் இன்னும் தொடர்கதையாக தொடர்கிறது.

ட்விட்டரில் அடிக்கடி கமலை வம்புக்கு இழுக்கும் சுப்ரமணிய சுவாமிக்கு – காரஞ்சாரமாக கமழும் பதில் கொடுத்து வருவது அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் கமல்ஹாசனை சுப்பிரமணியன் சுவாமி முதுகெலும்பில்லாத முட்டாள் என்று விமர்சனம் செய்ய அதற்கு கமல்ஹாசன், ‘ நான் முரட்டுத்தனமாக பதில் அளிக்க மாட்டேன். என்னை விட அவருக்கு அரசியல் அனுபவம் அதிகம்.

எனக்கு சாப்பாட்டில் எலும்பு இருக்கனும், ஆனால் உங்களுக்கு இல்லாமல் இருந்தால் தான் பிடிக்கும் நன்றாக சாப்பிடுங்கள்’ என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசனை வம்புக்கு இழுக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் ‘கமல்ஹாசன் ஒரு பகட்டான முட்டாள். கூத்தாடி, குடிகாரன் என்று சரமாரி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

ஏனெனில் தான் அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய கமல் நான் தமிழர்கள் அனைவரையும் பொறுக்கி என கூறியதாக வேண்டுமென்றே திரித்து கூறுகிறார் என கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி டுவிட்டர் பயனாளி ஒருவரின் கேள்விக்கு பதில் கூறிய சுவாமி, ‘கமல்ஹாசன் படிப்பறிவில்லாத ஆடம்பரமான முட்டாள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த விமர்சனத்திற்கு கமல்ஹாசன் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்