மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மாரடைப்பு பிரச்சினையாகும். கடந்த தலைமுறை வரை மாரடைப்பு என்பது 50 வயதிற்கு மேல் ஏற்படும் ஒரு ஆபத்தாக இருந்தது, ஆனால் இப்பொழுதோ இருபது வயதுகளிலேயே பல இளைஞர்கள் மாரடைப்பால் தாக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறைதான்.

மாரடைப்பு ஏற்பட்ட பிறகு ஒருவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்கள், உணவுமுறை என அனைத்திலும் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிடும். குறிப்பாக மாரடைப்பிற்கு பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் பல மாற்றங்களும், முன்னெச்சரிக்கைகளும் இருக்க வேண்டியது அவசியமாகும். இதய மருத்துவர்கள் கூறும் மாரடைப்பிற்கு பிறகான தாம்பத்திய வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
உணவு ஜீரணிக்கட்டும்

சுவையான இரவு உணவும் அதற்கு பின்னர் அழகான தாம்பத்யமும் அற்புதமான கலவையாகும். ஆனால் அது மாரடைப்பு ஏற்படுத்துவதற்கு முன்னால்தான். இதய கோளாறு உள்ளவர்கள், மாரடைப்பு ஏற்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உணவிற்கும், தாம்பத்யத்திற்கும் இடையில் சில மணி நேரங்கள் இடைவெளி விட வேண்டியது அவசியமாகும். உணவு நன்றாக செரித்த பின் தாம்பத்யத்தில் ஈடுபடுவது உங்கள் இதயம் மீதான அழுத்தத்தை குறைக்கும். குறைந்தது மூன்று மணி நேரம் உணவிற்கும், தாம்பத்தியத்திற்கு இடையில் இடைவெளி இருப்பது நல்லது .

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
மருந்துகள்

நீங்கள் சாப்பிடும் மருந்துகள் பற்றியும் அவை உங்கள் உடலின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக மாரடைப்பிற்கு பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடும்போது தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஒருவேளை நீங்கள் வயகரா உபயோகிக்க விரும்பினால் உங்கள் நைட்ரோ கிளிசரின் இருக்கும் மருந்துகளை குறைந்தது 72 மணி நேரத்திற்காவது எடுத்துக்கொள்ள கூடாது. இது உங்கள் இதயத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன் அதிக வலியையும் உண்டாக்கும்.

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
நோயின் தன்மை

மாரடைப்பிற்கு பிறகு மீண்டும் எப்பொழுது உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் மாரடைப்பிற்கு பிறகு மீண்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடும் காலமானது உங்கள் இதய பாதிப்பின் தன்மை மற்றும் அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட சிகிச்சை முறையை அடிப்படையாக கொண்டது.

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
ஸ்டென்ட் வைத்திருந்தால்

ஒருவேளை நீங்கள் ஸ்டென்ட் வைத்திருந்தால் உங்களின் தாம்பத்திய வாழ்க்கையை மாரடைப்பிற்கு பிறகான காலம் போலவே தொடர வேண்டும். ஒருவார காலம் பொறுத்திருப்பது நல்லது. நடக்கும்போதோ, அல்லது படி ஏறும்போதோ மூச்சு வாங்குவதோ அல்லது சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகளோ இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே தாம்பத்தியத்தில் மீண்டும் ஈடுபட வேண்டும்.

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை

கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இருந்து மாற்றுவழியில் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சையாகும். உங்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவை மேம்படுத்த மருத்துவர்கள் உங்கள் கை, கால் போன்ற இடஙக்ளில் இருக்கும் இரத்த நாளங்களை பயன்படுத்துவார்கள். இந்த சிகிச்சை எடுத்து கொள்பவராக இருந்தால் நீங்கள் உங்கள் உடலுக்கு அதிக ஓய்வு கொடுக்க வேண்டும்.

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
முன்பு போல் இருக்காது

ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முன்பு போல இருக்காது. மாரடைப்பு ஏற்பட்ட ஆண்களில் 55 சதவீதத்தினர் தங்களின் பாலியல் வாழ்க்கை முன்பு போல இல்லை எனவும் உறவில் ஈடுபடுவதில் பல சவால்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளர்கள். அதில் பாதி பேருக்கு விறைப்பு பிரச்சினையும், 19 சதவீதத்தினருக்கு பாலியலில் நாட்டமும் குறைவதாக ஆய்வுகள் கூறுகிறது.

 

மாரடைப்புக்கு பின் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கும்? இதய மருத்துவர்களின் பதில்கள் இதோ...! 
உடலுறவு மாரடைப்பை ஏற்படுத்துமா?

உடலுறவில் ஈடுபடுவது மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் மூடநம்பிக்கையாகும். முதல் மாரடைப்பு ஏற்பட்டு பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லையென்றால் உங்களுக்கு உறவால் மீண்டும் மாரடைப்பு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. உடலுறவால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பானது மிக மிக குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.