இரவு படுக்கும் போது எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன

நம் உடலில் உண்டாகும் சில பிரச்சனைகள் உடல் அழகைக் கெடுக்கும், சிலவன உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். ஆனால், பாத வெடிப்பு தான் அழகையும் கெடுக்கும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும். குதிக்கால் வெடிப்பு பிரச்சனையால் அவதிப்படும் நபர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாது. சில சமயங்களில் கடினமாக தளங்களில் அவர்களால் நடக்கவும் முடியாது. இதை சரி செய்ய ஓர் எளிய தீர்வு உள்ளது. உறங்கிக் கொண்டே தீர்வுக் காண முடியும்…

ஸ்டேப் 1
முதலில் நீங்கள் பெரிய அளவிலான எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக வெட்டி, அதிலிருக்கும் ஜூஸை முற்றிலுமாக பிழிந்து அகற்றி விடுங்கள். நமக்கு தேவை அந்த எலுமிச்சை தோல் மட்டும் தான்.

ஸ்டேப் 2
ஜூஸ் அகற்றி சற்றே காய்ந்த அந்த தோலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் குதிக்காலில் படும்படி வைக்கவும். உங்கள் குதிக்கால் வெடிப்புகளை முழுவதும் கவர் செய்தபடி வைப்பது சிறப்பு.

ஸ்டேப் 3
பிறகு அந்த எலுமிச்சை தோலின் நிலை விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொள்ளுங்கள். இது சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்ய உதவும்.

நேரம்!
காலை / பகல் வேளையில் நீங்கள் இப்படி எலுமிச்சை தோல் வைத்து சாக்ஸ் அணிந்துக் கொண்டு நடமாடாமல் இருக்க முடியாது. எனவே, உறவு தூங்க போகும் போது இதை பின்பற்றுவதால் நல்ல பலன் அடையமுடியும்.

போனஸ் டிப்ஸ்!
மேலும் எலுமிச்சையின் நறுமணம் இரவு உங்களை சுற்றி இருப்பது தூக்கமின்மை கோளாறை போக்கவும் உதவும்.

காலையில்….
காலை எழுந்ததும், உங்கள் குதிக்கால் வெடிப்பு மெல்ல, மெல்ல குனமடைவதை நீங்கள் ஓரிரு நாட்களில் நன்கு உணர முடியும்.