இந்த சீன வைத்தியத்தை வாரத்திற்கு 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் தெரியுமா

கண்ணாடியில் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போது, பலருக்கும் தொப்பையைப் பார்த்ததும் முகத்தில் இருந்த சந்தோஷம் போய்விடும். தொப்பை வயதான தோற்றத்தைக் கொடுப்பதோடு, விருப்பமான உடையை அணிய முடியாமலும் தடுக்கும். எனவே இந்த தொப்பையைக் குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

இதுவரை தொப்பையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது ஒரு சீன எடை இழப்பு வைத்தியம். இதற்காக அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் இது எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு அற்புத வைத்தியம்.

இந்த வைத்தியத்தால் நிச்சயம் தொப்பையை விரைவில் குறைக்க முடியும். சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் சீன எடை இழப்பு வைத்தியம் என்னவென்றும், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்றும் விரிவாக காண்போம்.

தொப்பையைக் குறைக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதும். அவையாவன:

* பாடி லோஷன் அல்லது மில்க் க்ரீம் - 4 ஸ்பூன்

* இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்

* பிளாஸ்டிக் விராப்/கவர்

* உல்லன் துணி

இந்த வைத்தியத்திற்கு பயன்படுத்தப்படும் சாதாரண பாடி லோஷன் வறட்சியைத் தடுத்து, ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும்.

* இஞ்சி மருத்துவ குணம் நிறைந்த அற்புத வேர்.

* இது கொழுப்புக்களைக் கரைக்கும்.

* செரிமானத்தை மேம்படுத்தும்.

* இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

* கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

* நச்சுக்களை எளிதில் வெளியேற்றும்.

ஒரு கண்ணாடி பௌலில் மில்க் க்ரீமுடன், இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை மைக்ரோ ஓவனில் 20 நொடிகள் வைத்து எடுக்க வேண்டும். இப்போது தொப்பையை கரைக்கும் க்ரீம் தயார்.

* தயாரித்து வைத்துள்ள க்ரீமை வயிற்றுப் பகுதியில் தடவ வேண்டும்.

* பின்பு பிளாஸ்டிக் கவரை வயிற்றுப் பகுதியில் சுற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதன் மேல் உல்லன் துணியை சுற்றிக் கொள்ள வேண்டும்.

இதை பகலில் மேற்கொள்வதாக இருந்தால், குறைந்தது 4 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறையை இரவில் படுக்கும் முன் செய்வதே சிறந்தது. இதனால் தொப்பை வேகமாக குறையும்.

* இந்த முறையை வாரத்திற்கு 3 முறை பின்பற்ற வேண்டும். இப்படி ஒரு மாதம் தவறாமல் செய்து வந்தால், நிச்சயம் உங்கள் தொப்பை குறைந்திருப்பதை நன்கு காணலாம்.

* முக்கியமாக இந்த முறையை தொப்பையை குறைக்க மட்டுமின்றி, கை, தொடை போன்ற பகுதிகளில் தொங்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும் பயன்படுத்தலாம்.

என்ன தான் தொப்பையைக் குறைக்கும் சீன வழியை பின்பற்றினாலும், ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, உண்ணும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் தொப்பை மேலும் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

குறிப்பாக தினமும் தவறாமல் குறைந்தது 40 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.

ஒரே பதில் தல,தளபதி ரசிகர்களை ஆஃப் செய்த மஞ்சிமா