அடிக்கடி ஏற்படும் தலைவலி: காரணம் இதுவாக இருக்கலாம்

தலைவலி உண்டாகும் போது அதற்கான நிவாரணிகளைப் பயன்படுத்தி சரி செய்வதை விட, தலைவலி ஏற்படும் காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.

தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்?
  • தலைக்கு குளித்ததும், அதை சரியாக காய வைக்காமல், அப்படியே தலையை சீவிக் கொள்வதால் தலையில் நீர் தங்கி, அது தலைக்கு மிகுந்த வலியை உண்டாக்கும்.
  • தலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் ஸ்கால்ப்பில் படும் போது, தலைவலியானது உண்டாகும்.
  • சாப்பிடாமல் வெளியில் செல்லும் போது, சூரியக் கதிர்கள் உடலில் உள்ள எனர்ஜியை ஈர்த்து, பெரும் தலைவலியை உண்டாக்கும்.
  • உடலில் வியர்வையால் ஏற்படும் அதிக துர்நாற்றத்தை மறைக்க அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் மூலமும் அடிக்கடி தலைவலி ஏற்படும்.
  • கம்ப்யூட்டர், மொபைல், டிவி ஆகியவற்றை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்பதால், கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கழுத்து வலி மற்றும் தலைவலி ஏற்படும்.
  • ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் உறக்கம் மிகவும் அவசியம். அந்த தூக்கம் குறைவாக இருந்தால், மூளை மற்றும் உடலின் புத்துணர்ச்சி குறைந்து தலைவலி அதிகமாகும்.
  • குளிர்ச்சி நிறைந்த பானங்கள் அல்லது ஐஸ் க்ரீம்களை அதிகமாக சாப்பிட்டால், அது மூளையை உறைய வைத்து தலைவலியை அதிகமாக்கிவிடும்.