லேட்டாக தூங்குவது விந்தணுக்களை பாதிக்குமா?

தினசரி சரியான நேரத்தில் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கிறது. மூளையின் செயல்பாடுகளுடன் தூக்கம் மற்றும் தூக்கமின்மை தொடர்புடையதாக இருக்கிறது. 18 வயது முதல் 64 வயதினருக்கு அமெரிக்க ஸ்லீப் ஃபவுண்டேஷன் 7-9 மணி நேர தூக்கத்தை பரிந்துரைக்கிறது. தாமதமாக உறங்குபவர்கள் மற்றும் இரவு வேலை செய்பவர்களுக்கு ஆரோக்கியம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வில் சரியாக தூங்கும் ஆண்களின் விந்தணுக்கள் தரமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹார்பின் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ஆயிரம் ஆண்கள் பங்கேற்றனர். இதில் 8 முதல் 10 மணிக்குள் தூங்கிய ஆண்களின் விந்தணுக்களின் தரம் உயர்வாக இருப்பதாகவும், அவை நீண்ட நேரம் உயிர்வாழ்வதாகவும் அறிந்தனர். பின்னர் அவர்களின் விந்தணுக்கள் மற்றவர்களுடைய விந்தணுக்களை காட்டிலும் கரு முட்டையை சென்றடைய அதிகமான வாய்ப்புகள் இருப்பதை அறிந்தனர்.

பின்னர் ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான தூக்கம், ஏழு மற்றும் எட்டு மணி நேர தூக்கம், ஒன்பது மற்றும் அதற்கு மேற்பட்ட நேரம் தூங்குபவர்களின் விந்தணு மாதிரிகளை சேகரித்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவானது ஆறு மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூங்குபவர்களது விந்தணுக்களின் தரம் மிக மோசமாக இருந்தது தெரியவந்தது. ஆரோக்கியமான விந்தணுக்களை உருவாக்கக்கூடிய ஒரு வகை புரதத்தின் உற்பத்தி தாமதமாக உறங்குவதால் குறைகிறது.

இதற்கு முந்தைய ஆய்வானது, 6 மணிநேரத்திற்கும் குறைவாக உறங்கும் ஆண்களின் விந்தணுக்கள் மற்றவர்களின் விந்தணுக்களை விட 25% குறைவான எண்ணிக்கை கொண்டுள்ளது என தெரிவித்திருந்தது.

நீங்கள் சரியான நேரத்தில் தூங்க வேண்டும் என நினைத்தும் தூங்க முடியவில்லையா? நிம்மதியான தூக்கம் கிடைக்கவில்லையா? இந்த சில விஷயங்களை மாற்றியமையுங்கள்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக உணவு உட்கொள்ள வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் முன்னதாக டிவி, கணினி, செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்கவும்.

நன்றான உறக்கத்திற்கு மிதமான சூடு உள்ள நீரில் குளியுங்கள். குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகளை பயன்படுத்துங்கள் அல்லது விளக்குகளை அணைத்து விட்டு தூங்குங்கள். தூங்குவதற்கு முன்பாக பாடல் கேட்பது மனதை லேசாக்கும்.

தூங்கும் போது இறுக்கமான உடைகளை அணியாமல், வசதியான உடைகளை அணியுங்கள். உங்களது தலையணை மற்றும் மெத்தை உறங்குவதற்கு வசதியாக உள்ளதா என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.

நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் சரியான தூக்கமின்மையை எவ்வாறு அறிந்து கொள்வது என கூறியுள்ளது.

வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது போல உணர்வு

எரிச்சலாக, அசதியாக அல்லது சோம்பேறித்தனமாக நாள் முழுவதும் உணர்வது

கவன குறைவாக இருப்பது.

 

வாட்சப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்