விரல்களைத் இவ்விடத்தில் நொடிகள் தேய்ப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்!!

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது. அதனால் தான் அக்குபிரஷர் சிகிச்சையில் உடலின் ஏதோ ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் பிரச்சனைகள் குணமாகின்றன. அந்த வகையில் நம் கைவிரல்கள் ஒவ்வொன்றும் உடலின் ஒவ்வொரு பகுதியுடனும் தொடர்பில் உள்ளது.இக்கட்டுரையில் குறிப்பிட்ட கைவிரல்களை 60 நொடிகள் தேய்ப்பதால் அல்லது அழுத்தம் கொடுப்பதால், உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து வைத்துக் கொண்டு நன்மைப் பெறுங்கள். பெருவிரலானது இதயம் மற்றும் நுரையீரலுடன் தொடர்பில் உள்ளது. ஆகவே ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்கும் போது, பெருவிரலை 60 நொடிகள் தேய்த்து அல்லது அழுத்தம் கொடுத்து, பின் இழுத்துவிடுங்கள்.

ஆள்காட்டி விரல்:ஆள்காட்டி விரலை 60 நொடிகள் தேய்ப்பதால், அது மண்ணீரல் மற்றும் வயிற்றின் செயல்பாட்டை சீராக்கி, செரிமான பிரச்சனைகளைப் போக்கும்.மேலும் ஆள்காட்டி விரல் குடலுடனும் தொடர்புடையது என்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் போது ஆள்காட்டி விரலைத் தேய்த்துவிடுங்கள் அல்லது அழுத்தம் கொடுங்கள்.நடுவிரல்:பயணத்தின் போது குமட்டல் உணர்வை சந்தித்தால், நடுவிரலில் அழுத்தம் கொடுங்கள். மேலும் நடுவிரலை 60 நொடிகள் அழுத்தம் கொடுத்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மோதிரம் மற்றும் சுண்டு விரல்:இந்த இரண்டு விரல்களையும் ஒன்றாக சேர்த்து 60 நொடிகள் மறு கையால் அழுத்தம் கொடுக்கும் போது, அது மோசமான இரத்த ஓட்டத்தால் சந்திக்கும் ஒற்றைத் தலைவலி மற்றும் கழுத்து வலியில் இருந்து விடுவிக்கும்.

உள்ளங்கை:உள்ளங்கையில் நிறைய நரம்புகள் இணைவதால், இந்த இடத்தில் 60 நொடிகள் அழுத்தம் கொடுக்கும் போது, அது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.