ஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை? எந்த ராசிக்கு தீமை?

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள நீங்கள் போடுகின்ற திட்டங்கள் யாவும் நன்மையே உண்டாக்கும். நிர்வாகத்தில் உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய சூழல்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்ய நினைத்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனை, வீடு சம்பந்தமான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். புனித யாத்திரைகள் செல்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

நண்பர்களின் மூலமாக புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கப் போகின்ற பண உதவியினால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையல்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கால தாமதமாகக் கிடைக்கும். செய்கின்ற வேலைகளில் பிறருடைய விமர்சனங்கள் வரும். அதையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். அதேசமயம் செய்கின்ற காரியங்களை பதட்டம் இல்லாமல் நிதானத்துடன் செய்து முடியுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடன் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முடிவுகள் எடுப்பதில் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பணிகளில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சுப செய்திகளின் வாயிலாக மகிழ்ச்சி பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

விவாதங்களின் மூலமாக உங்களுக்கு சூழலை அமைத்துக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலமாக தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வாயிலாக, சுப விரயச் செலவுகள் உண்டாகும். பணிகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம்அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். சொந்த ஊருக்கான பயணங்களின் மூலமாக உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கிறது.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

உறவினர்களுக்கு இடையே இருக்கின்ற உறவு நிலைகள் மேம்படும். பணப் புழக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் பெறுவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் அமையும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதற்கான செயல்திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.