எண் 6 இல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்: இவர்கள்தான் அதிஷ்டசாலிகளாம்

ஒன்பது எண்களிலும் இயற்கையிலேயே அதிர்ஷ்டசாலிகளான 6ம் எண்காரர்களைப் பற்றிப் பார்ப்போம்.

இந்த உலகத்தைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் இவர்கள்தான். பூர்வ ஜென்மம், அடுத்த ஜென்மம் போன்றவற்றில் அதிகம் நம்பிக்கையில்லாதவர்கள். அது மட்டுமல்ல அப்படிப் பேசுபவர்களைக் கண்டால் கிண்டலும், குதர்க்கமும் செய்வார்கள்.

இன்பம், பணம், சுகமான அனுபவங்கள் நோக்கிலே இவர்கள் ஓடுவார்கள்! சுயநலம் மிகுந்தவர்கள் இவர்கள்தான். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள். நீடித்த இளமை இவர்களது வரப்பிரசாதமாகும். மன்மதர்களின் மைந்தர்கள் இவர்களே புத்திரபாக்யம் நிறைந்தவர்கள் இவர்கள்தான்.

அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகம் உண்டு. பணவிஷயத்தில் இவர்களே மிகவும் அதிர்ஷ்டமானவர்கள். இவர்களே குபேரனின் மைந்தர்கள்! எவர் மூலமாவது எப்படியாவது இவர்களுக்குச் சமயத்திற்கு ஏற்பப் பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதிலும், சிற்றின்பத்திலும் பணத்தை நிறைய செலவு செய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு (லாபம் இல்லாமல்) உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

இந்த 6ல் எண்காரர்கள் சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். 6 எண் பலம் குறைந்தால் கடவுள், சாத்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள்.

அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துத்தான் கொடுப்பார்கள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள்.

தங்களது சபல புத்தியின் காரணமாகப் பல அன்பர்கள் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி, ஏங்கி, பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர்.

மனத்தில் பலவகைக் குணங்கள், பொறமைகள், மற்றவர்களை புண்படுத்தும் குறும்புப் பேச்சுகள் இவர்களுக்கு உண்டு. ஆனால் எவராவது இவர்களுடைய துயரங்களையும், துன்பங்களையும் பற்றிப் பேசினால் இவர்களுக்கு அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காது! இவர்களுக்கு ஓரளவு கோப குணமும் உண்டு. கோபம் வரும் போது முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.

இவர்களுக்க 5ம் எண்காரர்களைப் போன்று நண்பர்கள் அதிகம் உண்டு. இவர்கள் எளிதில் மாற்ற முடியாத பிடிவாதம்காரர்களே!

எனவே சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாகவே ஒரு வீட்டில் 6 எண் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்பார்கள். மேலும் 6 எண்காரர்கள், தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிடப் பிற்காலத்தில் உயர்ந்த செல்வர்களாகவே விளங்குவார்கள்.

பணவிஷயத்தில் தன ஆகர்ஷண சக்தி, இவர்களுக்கு இயற்கையிலேயே நிறைந்து காணப்படும். எப்போதும் இவர்கள் தங்களது அதிர்ஷ்டத்தையே நம்பி இருப்பார்கள். துன்பப்பட்டு உழைப்பதில் அலட்சியம் காட்டும் குணம் இருக்கும்.

இதை இவர்கள் மாற்றிக் கொண்டால்தான் 'விஜயலட்சுமி' எப்போதும் இவர்களுடன் இருப்பாள். தங்களின் அனாவசியக் குடும்பச் செலவுகள், அனாவசிய ஆடம்பரச் செலவுகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டால் தான், பணம் எப்போதும் நீங்காமல் இவர்களுடன் இருக்கும். இல்லையெனில் கடன் தொல்லையும், ஏமாற்றமும் ஏன் வறுமையும்கூட ஏற்பட்டு விடும்.

இவர்களது தொழில்கள்

இவர்கள் மனத்திற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, டிராமா, இசை போன்ற பொழுதுபோக்குத் துறைகளில், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம்! மேலும் துணிக்கடை, நகைக்டை, பிளாஸ்டிக் சாமான்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றி தரும்.

சிற்பம், சித்திரம் போன்ற நுணுக்கமான துறைகளிலும், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகை விற்பனை தயாரிப்பு ஆகியவற்றிலும் இவர்கள் வெற்றி அடையலாம். அதுமட்டுமன்று சட்ட நுணுக்கம் பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள் போன்ற தொழில்களும் ஓரளவு நல்லதே! ஆனால் பணத்திற்காக வளை கொடுக்கும் இயல்பு இவர்களுக்கு உண்டு. மேலும் பெண்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருட்கள், அழகு சாதனங்கள் வியாபாரமும் போன்றவையும் நன்மை தரும்.

முத்து பவளம் போன்ற நவரத்தினங்கள் வியாபாரமும் செய்யலாம். எப்போதும் பிறரின் உதவியும், மக்கள் வசியமும், இயற்கையாகவே இவர்களுக்கு உண்டு. மற்றவர்களுக்காக வீடுகள் கட்டி, அதை விற்கும் தொழில்களில் இவர்கள் ஈடுபடலாம். கண்ணாடி, வாசனைப் பொருட்கள், பூக்கள், மாலைகள், வியாபாரமும் சிறந்ததே! சங்கீதம், வாய்ப்பூட்டு, இசை வாத்தியங்கள் ஆகியவை மூலம் நல்ல பொருள்கள் ஈட்டலாம்.

திருமண வாழ்க்கை

திருமணத்தின் மூலம் ஆதாயமும், இலாபமும் கிடைக்கின்றனவா என்றே இவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். இருப்பினும் திருமணத்திற்குப் பின்பு மனைவியை நன்கு வைத்துக் கொள்வார்கள்! மனைவியிடம் திருப்தி குறைவு என்றால், மற்ற வழிகளில் ஈடபத் தயங்க மாட்டார்கள். எனவே 6ம் எண்காரர்களை மணக்கும் பெண்கள் தங்களைத் தினமும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, கணவன்மார்களின் குணம் அறிந்து நல்ல சமையல், நல்ல உபசரிப்பு மூலம் நன்கு வசியம் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு இவர்களைப் போன்று நல்ல கணவர்கள் அமைவது கடினம் என்று அவர்கள் உணர்வார்கள். இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். இவர்களின் வேகத்திற்கு (?) ஈடுகொடுக்க முடியும்! 1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.

மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.

இவர்களது நோய்கள்

பொதுவாகச் சாப்பாட்டு பிரியர்கள். எனவே உடல் பருமன் பிரச்சினைகள் (ளிதீமீsவீtஹ்) உண்டு. இதய பலவீனம் , இரத்த ஓட்டக்கோளாறுகள் ஏற்படும். மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். புகைபிடித்தல், மது போதைப் பொருட்கள் போன்றவற்றையும் அறவே ஒதுக்கிவிடவேண்டும்.

அடிக்கடி மூச்சுத் தொந்தரவுகளும், சுவாச சம்பந்தப்பட்ட நோய்களும் ஏற்படும். மாதுளை, ஆப்பிள், வால்நட், கீரை வகைகள் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். திறந்த வெளிகளில் தினமும் உலாவி வரவேண்டும்.

இதன் மூலம் பல நோய்களைத் தவிர்த்து விடலாம். இந்த எண்காரர்கள் பக்தி, பொதுத் தொண்டு செய்தல் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இவர்களுக்குப் பெரும் புகழும், அமைதியான வாழ்க்கையும் நிச்சயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட தினங்கள்

ஒவ்வொரு மாதத்திலும் 6, 15, 24 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக்க அதிர்ஷ்டகரமானவையே! கூட்டு எண் 6 மற்றும் 9 எண் வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் 3, 12, 21 ஆகிய தினங்களும் கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது! நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம் மற்றும் இரண்டு கலந்த வண்ணங்கள்! இலேசான சிவப்பும் அதிர்ஷ்டத்தைக் கூட்டுவிக்கும். வெள்ளை, ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும்.

அதிர்ஷ்ட இரத்தினங்கள்

இவர்களுக்கு மரகதமே (பச்சை என்பார்கள்) சிறந்தது. ஆங்கிலத்தில் EMERALD என்பார்கள். மேலும் AQUAMAIRNE, JADE, BERYL, PARIDOT, TURQUOISE (பச்சை நிறம்) போன்ற இரத்தினக் கற்களும் அணிந்துவர, யோகங்கள் பெருகும். AMETHYST (செவ்வந்திக்கல்) அணியவே கூடாது!

6 ஆம் தேதி பிறந்தவர்கள்

எப்போதும் செல்வத்தில் திளைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காகக் கடுமையாக உழைப்பார்கள். எவரையும் சரிக்கட்டி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். பெண் தன்மையும் காணப்படும். எதிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபடுவார்கள்.

அடக்க சுபாவமும், ஆழ்ந்த சிந்தனைகளும் உண்டு. கலைகளில் (64 கலைகளில் ஏதாவது ஒன்று அல்லது சில) மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்கள் சாந்தமானவர்கள்தாம். கோபம் வந்தால் விசுவரூபமாகிவிடும். சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தவர்கள். சுகம் நிறைய அனுபவிப்பார்கள்.

15 ஆம் தேதி பிறந்தவர்கள்

மற்ற மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. எதிரியை எடை போடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆனால் எதிரிகளை எப்போதும் மறக்க மாட்டார்கள்.

பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும் அவற்றை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பார்கள். நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.

24 ஆம் தேதி பிறந்தவர்கள்

அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் ஆனால் அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும், பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர்கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்து முடிப்பார்கள்.

எனவே, விரைவிலேயே கிடைத்துவிடும். சிலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். தமக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக் கொண்டு அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்குக் கர்வமும் ஏற்படும். தங்கள் கருத்துகளை அடுத்தவர் மீது திணிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.