ஆடி வெள்ளியில் அரிய சந்திர கிரகணம்: இந்த மூன்று ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட ரத்த சிவப்பு நிலா நாளை வானில் தோன்றவுள்ளது.

இது இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திர கிரகணம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, இரவு 11.53 க்கு தொடங்கும் கிரஹணம் நள்ளிரவு 12.59க்கு முழு கிரகணமாக வானில் நீடிக்கிறது.

முழு கிரஹண மத்தி ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 1.51 வரை நீடிக்கிறது. நள்ளிரவு 2.43க்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது என்று சொல்லப்படுகின்றது.

தோன்றவுள்ள இந்த முழு சந்திர கிரகண நாளில் பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்வது நல்லது என ஜோதிடர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் ரிஷபம், சிம்மன், கன்னி, மகரம், கும்பம், ஆகிய ராசிகளில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த சந்திர கிரகணம் தினத்தில் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அன்றைய தினத்தில், குறிப்பிட்ட 3 ராசிக்காரகளுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவை எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

கும்பம்

இவர்கள் பொதுவாகவே கலகலப்பாக இருப்பார்கள். ஆனால் சந்திர கிரகணம் அன்று சற்று கோபமாக இருப்பார்கள். எதை கண்டாலும் ஒரு விதமான எரிச்சல் இருக்கும்.. யாரிடம் பேசினாலும் அது பெரிய சண்டையாக மாற வாய்ப்பு உள்ளது.

எனவே பேசும் போது முரண்பாடு ஏற்பட்டால், அங்கிருந்து எழுந்து செல்வது நல்லது

மகரம்

சந்திர கிரகண நாளன்று, இதன் தாக்கம் சற்று மந்தமாக இருப்பதால், பாதிப்பும் சற்று மந்தமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது

இன்றைய தினத்தில் யாரிடமும் கோபப்படாமல் இருப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த தருணத்தில் உலகமே நம் பின்னால் தான் உள்ளது என நினைக்க தோன்றும்.

சந்திரகிரணத்தின் போது செய்ய கூடாதவை

கிரகணம் முடிந்த பின் குளிக்கவும் வழக்கத்தை விடவும் அதிக நேரம் இந்த முறை சந்திர கிரகணம் இருக்கும் என்பதனால், இது மற்ற கிரகங்களுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும்.

பொதுவாக சந்திர கிரகணம் மற்ற கிரகங்களைப் பாதிக்கும் என்பதால் இயல்பாகவே அதன் பாதிப்பு நமக்கும் இருக்கும்.

அதிலும் சில குறிப்பிட்ட ராசிகளை சந்திர கிரகணம் பாதிக்கும்.

அதனால் தான் பொதுவாக சந்திர கிரகணம் முடிந்தவுடன் எல்லோரும் தலைக்கு குளித்துப் பின், சாப்பிட வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ளது.