இன்றைய ராசிபலன் இதோ

தினம் தினம் திருநாளே!..

மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு.

அதுபோல, தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்

நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பணலாபமும் கிடைக்கும். புதிய முடிவுகள் எடுப்பதை மட்டும் இன்று தவிர்க்கவும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். செலவுகள் சற்று அதிகரிப்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். ரோகிணி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மிதுனம்

முற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். அன்றாடப் பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். நீண்டநாள்களாக நினைத்திருந்த தெய்வ பிரார்த்தனையை இன்று நிறைவேற்றுவீர்கள். மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

கடகம்

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் திரும்பக் கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி

இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

துலாம்

அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தனுசு

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தடைப்படும்.

மகரம்

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. ஆனாலும், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

கும்பம்

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சதயம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

மீனம்

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மாலையில் நீண்ட நாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும்.