கன்னியில் சந்திரன் கும்பத்திற்கு சந்திராஷ்டமம் 12 ராசிக்கும் பலன்கள்

சென்னை: பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் நாளான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என பார்க்கலாம்.

மனோகாரகன் சந்திரன் இன்றைய தினம் சிம்மராசியில் இருந்து பிற்பகலுக்கு மேல் கன்னி ராசியில் பயணம் செய்ய இருக்கிறார். இதனால் கும்பம் ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.

மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினம் கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் டென்சனை குறைத்து அமைதி காக்கவும்.

ஒருவர் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும். இதையே சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் 'சந்திராஷ்டம' காலம் என்கிறோம்.

ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் இருக்கிறார். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இன்று மாலை 6வது வீடான கன்னி ராசிக்கு சந்திரன் இடம் பெயர்கிறார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சந்திரன் இன்றைய தினம் நான்காவது இடத்தில் இருக்கிறார். தாயாருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் ஏற்படும்.
திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். இன்று மாலையில் 5வது இடத்திற்கு சந்திரன் வருகிறார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசிக்கு மூன்றாவது இடத்தில் சந்திரன் இருப்பதால்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மாலையில் சந்திரன் 4வது இடத்திற்கு நகர்கிறார். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் இன்றைய தினம் அதிக லாபம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசிக்கு 2வது இடத்தில் உள்ள சந்திரனால் பண வரவு அதிகரிக்கும். குருவும், சனியும் சாதகமாக இருப்பதால் இன்றைய தினம் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். மூன்றாவது இடத்திற்கு மாலையில் நகர்கிறார் சந்திரன். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் கணிசமாக உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

இன்று மாலை வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனக்குழப்பம் நீடிக்கும் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். அமைதியாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். அலுவலகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: மெரூண், வெள்ளை

ராசிக்கு 12வது இடத்தில் இருக்கிறார் சந்திரன். இன்றைய தினம் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மாலையில் சந்திரன் ராசிக்குள் நுழைகிறார். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேச வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும் கவனம்.

ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் சந்திரன். இன்றைய தினம் குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாலையில் ராசிக்கு 12வது இடமான விரைய ஸ்தானத்திற்கு வருகிறார் சந்திரன். செலவுகள் அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்க முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

ராசிக்கு 10வது இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மாலையில் 11வது இடமான கன்னி ராசிக்கு சந்திரன் வருகிறார். பண வரவு அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

இன்றைய தினம் ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். 10வது இடத்திற்கு மாலையில் சந்திரன் வருகிறார். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே