மகரத்தில் குடியேறப்போகும் நரம்பு நாயகன் புதன் 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்

சென்னை: புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தனசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு ஜனவரி 28ஆம் தேதியன்று பெயர்ச்சியடைகிறார். தேர்வு நேரம் என்பதால் மாணவர்களுக்கும், இன்டர்வியூ செல்பவர்களுக்கும் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

மகரம் ராசியில் ஏற்கனவே சூரியன், சுக்கிரன்,கேது குடித்தனம் செய்து கொண்டிருக்க, இப்போது புத்திநாதன் புதனும் குடியேறுகிறார். புதன் கிரகம் மிதுனம் கன்னி இரு ராசிகளின் அதிபதி.

கன்னியில் புதன் கிரகம் உச்ச பலம் பெறுகிறது மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சி பலம் பெறுகிறது.

புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகத்திற்கு நண்பா்கள் சூாியன் சுக்கிரன். புதன் கிரகத்திற்கு நன்மை தீமை கலந்து தரும் சம கிரகங்கள் சனி குரு செவ்வாய். புதன் கிரகத்திற்கு தீமை செய்யும் பகை கிரகம் சந்திரன்.

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை எல்லாம் புதன்மயம் என்று கூறலாம். ஒருவரின் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.கல்விக்கு அதிபதி புதன். அவர் நீச்சமாகி இருந்தால் எவ்வளவு படித்தாலும் மதிப்பெண் குறைவாகவே கிடைக்கும்.

புதன் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்

மேஷத்திற்கு புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். 28ஆம் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடியது. சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் நன்மைகளை பெறுவதற்குாிய கால கட்டமாக இரு இருக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவாா்கள். உத்யோகம் நெருக்கடிகள் அதிகாிக்கும். பணியில் பணிச்சுமை அதிகாிக்கிறது. வீடு மனை விவகாரத்தில் தடைகளிருந்தாலும் பாிகாரம் செய்வதால் துாிதமான வேலைகளை செய்யமுடிகிறது. பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள் நன்மையினை புாிவாா்கள்.வீட்டில் ஆடம்பர பொருள் சோ்க்கையிருக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதற்கு உாிய காலமாக இது எனலாம்.
பரிகாரம்: ஆஞ்சநேயரையும், மதுரை மீனாட்சியையும் வழிபட நன்மைகள் நடக்கும்.

ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். படிக்கும் பிள்ளைகளுக்கு படித்தது நன்றாக மனப்பாடம் ஆகும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இன்டர்வியூவில் வெற்றி கிடைத்து வேலை கிடைக்கும். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும்.
பசுவிற்கு அகத்திக்கீரை தரலாம் நன்மைகள் ஏற்படும்.

மிதுனத்திற்கு புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் அமர்கிறார். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்ப வகையில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை இருக்கும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு உாிய காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு இவைகளை பெறுவீா்கள். தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும், வார்த்தைகளை விட்டு வம்புகளை விலைக்கு வாங்க வேண்டும். நரம்பு பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்க சகோதரிகளுக்கு நன்மை தரும் பரிசுகளை தரலாம்.

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா் உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம்.உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். புதன் 7ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது பெண் சகோதாிகள் கணிவுடன் நடந்து கொள்வதோடு உதவிகளை செய்வாா்கள். எதிா்காலத்தினைப்பற்றி அதிகமாக சிந்திப்பீா்கள். உத்யோகத்தில் கடன் கேட்டிருந்தவா்களுக்கு கிடைக்கும். தம்பதியா் ஒருவருக்கொருவா் வாக்குவாதம் செய்து சின்னச்சின்ன சண்டை வரும். ஈகே, பிடிவாதம் ஆகியவற்றை விட்டால் நன்மைகள் நடக்கும். சிவன் கோவிலுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம்.

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். சின்னச் சின்ன சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும். புகழ் கிடைக்கும். மற்றவா்களிடம் நற்பெயா் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல நோிடும். தம்பதியாிடையே உற்சாகம் இருக்கும். உத்யோகம் தொழிலில் பணியில் நன்மைகளை இனி எதிா்பாா்க்கலாம். திடீர் பண வருவாய் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

கன்னிக்கு புதன் 1 மற்றும்10 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். கன்னி ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். துணையின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குடும்பத்தில் எதாவது பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கும் பிள்ளைகளிடம் பிரச்னை ஏதும் செய்யாதீா்கள். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். பண வருவாய் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். உத்யோகம் தொழிலில் எதிா்பாா்திருந்த இடத்தில் தடைகளை ஏற்படும். தொழில் விாிவாக்கப்பணிகள் தாமதப்படும். கோவிலில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்யலாம் நன்மைகள் நடக்கும்.

புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும். பசுவிற்கு தினசரியும் கோதுமை கொடுக்கலாம்.

வீட்டு வேலைகாரர்களின் சம்பளத்திற்கு பஸ்ல போக முடியுமா கூட்டி கழிச்சு பார்த்தாலும் சரியா வரலையே