இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் இந்த ஆண்டு காதல் பிரிவு உண்டாகலாம் பயப்பட தேவையில்லை

கிரகங்களின் இடப்பெயர்ச்சி மாற்றங்களால் சில நேரங்களில் நமது சூழ்நிலை என்பது மிக மோசமான ஒன்றாக மாறலாம்.. அந்த சமயத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது தான் முக்கியமான ஒரு சூழ்நிலையாகும்...!

இதில் நல்ல விஷயம் என்னவென்றால், நம்மை பெரும்பான்மையான சூழல்கள் எதிர்க்கும் போது தான், நாம் அந்த சூழ்நிலைகளுக்கு பாடம் கற்பித்து கொடுக்க முடியும்.. எந்த ஒரு பிரச்சனையின் முடிவிலும் தான் நாம் யார் என்று பிறருக்கு காட்ட முடியும்.. எனவே பிரச்சனைகளை கண்டு கலங்காத நிலை வேண்டும்..

நீங்கள் பள்ளியில் படிக்கும் போது சில விஷயங்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கலாம்.. ஆனால் அந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி வரும் போது வாழ்க்கையில் ஏதேனும் ஒன்றை கற்றுக் கொள்ள முடிகிறது என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள் தானே..!

இந்த பகுதியில் இந்த ஆண்டு யாருக்கு எல்லாம் காதல் முறிவு உண்டாக வாய்ப்புகள் உள்ளது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்த உடனே ஷாக் ஆகிவிடாதீர்கள்.. காதல் தோல்வி என்பதும் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ஒரு தோல்வி தான்.. ஆனால் நீங்கள் ஒரு சில விஷயங்களில் உஷாராக இருப்பதன் மூலம் உங்களது காதலுக்கு நடுவில் நடக்கும் சில பிரச்சனைகள் மற்றும் பிரிவுகளில் இருந்து தப்பலாம்..!

மிதுனம்

கடந்த ஆண்டு நடந்த சனிப்பெயர்ச்சியான இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு மிக சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரப்போகிறது என்று கூறலாம்.. காதலை ஒவ்வொரு ராசிக்காரர்களும் வெளிப்படுத்தும் விதமான வெவ்வேறாக இருக்கலாம்.. ஆனால் மிதுன ராசிக்காரர்களாகிய நீங்கள் ஒருவரிடம் காதலை சொல்ல வேண்டும் என்றால், மற்றவர்களின் துணையை ஒரு போதும் எதிர்பார்க்க கூடாது..!

 

கண்களை பார்த்து சொல்லுங்கள்

நீங்கள் காதல் சொல்ல விரும்பம் தெரிவிக்கும் அந்த நபரை நேருக்கு நேர் பார்த்து சொல்லிவிடுவது என்பது நல்லது ஆகும். மிதுன ராசிக்காரர்கள் ஒரு போதும் தான் வேறு தனது காதலி வேறு என்று நினைக்காதவர்கள்.. இவர்கள் தனக்குள் உள்ள காதலை வெளிப்படுத்தவும் சரியாக தெரிந்தவர்கள்.. இவர்கள் தங்களது முழு வாழ்க்கையையுமே தான் காதலிக்கும் ஒருவருக்காக மாற்றிக் கொள்ள கூடியவர்கள்.. உங்களது வாழ்க்கை துணையை நீங்கள் இந்த ஆண்டில் சந்திக்கவில்லை என்றாலும் கூட உங்களது வாழ்க்கை துணையை வரும் காலங்களில் கண்டிப்பாக சந்திப்பீர்கள்...!

காதலை பூட்டி வைக்க வேண்டாம்

நீண்ட நாட்கள் உங்களது மனதிற்குள்ளேயே காதலை பூட்டி வைப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.. முன் கோபத்தை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.. அடிக்கடி காதலுக்குள் வரும் மோதல்களை கூடுமான வரை சீக்கிரமாக சுமூகமாக்க முயற்சி செய்யுங்கள்..

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் என்ன தான் உங்களது வாழ்க்கையை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் கூட, உங்களது வாழ்க்கையில் அது நடக்காத கடினமான ஒன்றாக தான் இருக்கும். நீங்கள் சிறு வயதில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவராக இருப்பீர்கள்.. உங்களது வாழ்க்கையில் குழப்பமான சூழல் அதிகமாக இருக்கும்..

 

திடீர் சூழ்நிலைகள்

நீங்கள் உங்களது வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நல்லவராகவே இருக்க முடியாது.. சில நேரங்களில் உங்களது சொந்த தேவைகளுக்காக நீங்கள் போராட வேண்டியது இருக்கும். காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டியதும், தீடீர் சூழ்நிலைகளை எதிர் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டியது என்பது அவசியமாகும். உங்களது அறிவை மற்றவர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும்.

ஆரோக்கியமான உறவு

உங்களது துணையிடம் எந்த வித விஷயங்களையும் மறைக்காமல் நடந்து கொள்வது உங்கள் மீது அவருக்கு நம்பிக்கை உருவாக காரணமாக இருக்கும்.. சண்டையில் எப்போதும் நீங்களே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காமல், உங்களது துணையே வெற்றி பெறட்டும் என்று விட்டுவிடுங்கள்.. இது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்...!

விட்டுக் கொடுங்கள்

விட்டுக் கொடுத்து போவதால் உங்களது வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும் என்றால், நீங்கள் விட்டுக் கொடுத்து போவதில் தவறே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.. எனவே வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை நினைத்து, பெரிய பெரிய விஷயங்களில் கோட்டை விட்டு விடாதீர்கள்..

விருச்சிகம்

உங்களது மனதை சிதைக்க வேறு யாரும் தேவையில்லை.. தேவையில்லாத விஷயங்களை எல்லாம் மனதினுள் போட்டு குழப்பி உங்களது மனதை நீங்களே சிதைத்துக் கொள்வீர்கள். உங்களை நீங்களே காயப்படுத்திக் கொண்டு மற்றவர்களின் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டியது அவசியமாகும்.

 

காயங்கள்

நீங்கள் உங்களை காயப்படுத்திக் கொள்வதாக நினைத்து செய்யும் சில விஷயங்கள் உங்களை விட மற்றவர்களை தான் அதிகமாக காயப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். இல்லை என்றால் இது அழிவுக்கு காரணமாகிவிடும்.. புதுமைகள் செய்வதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்..

இவ்வாறு செய்யாதீர்

எப்போதுமே உங்களை அதிகமாக நேசிக்கும் ஒருவரை தூக்கி எறிந்து பேசாதீர்கள்.. பின் அவர்களின் அன்பு கிடைக்காமல் போகும் போது வருத்தப்பட்டு எந்த ஒரு பயனும் கிடையாது.. உங்கள் மீது அன்பு செலுத்துபவர் ஏதேனும் தவறு செய்தால் அதனை அன்பாக சொல்லி புரிய வைக்க வேண்டியது உங்களது கடமையாகும்..

அவசர முடிவுகள்

எதையும் எடுத்து எறியாதீர்கள்.. பொருள் சேதத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் வருத்தம் காட்டாதீர்கள்.. கோபமாக இருக்கும் போது எந்த ஒரு முடிவையும் அவசர அவசரமாக எடுக்க வேண்டாம்.. மனதை அமைதிப்படுத்துங்கள்.. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது..

1000 ஸ்பார்டன்களுக்கு சமமான பலம்பொருந்திய ஹெர்குலஸ் திகைப்பூட்டும் உண்மைகள்