2018 ஜனவரி மாத முதலாம் எண்ணில் பிறந்தவர்களின் முழுவதுமான வாழ்க்கை ரகசியங்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும்.

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் பயத்தை போக்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் வலிய வந்து உதவுவார்கள். புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள்.

குடும்பத்துடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். புது நட்பு மலரும். சுப நிகழ்ச்சி, பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அரைக்குறையான நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தந்தையில் மதிக்கப்படுவீர்கள்.

அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் தாயாருக்கு கை, கால் அசதி, சோர்வு, அவ்வப்போது வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். பற்று வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 30
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

பிக்பாசிற்கு பிறகு ஓவியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா இவ்வளவா