ரேவதி நட்சத்திரமா சசிகலான்னு பேர் வைங்க 12 ராசிக்களுக்கு ராசியான பெயர்கள்

சென்னை: ஜாதகத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரத்தின்படி பெயர் வைப்பது விசேஷமாகும். 27 நட்சத்திரக்காரர்களுக்கும் என்ன பெயர் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவருக்கு வைக்கும் பெயர்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எனவேதான் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு பெற்றோர்கள் அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு சூட்டும் பெயர் உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்று நினைத்துதான் பெற்றோர்கள் நாள் நட்சத்திரம் நல்ல நாள் பார்த்து பெயர் வைக்கின்றனர். அதை விழாவாக கொண்டாடுகின்றனர்.

மேஷ ராசியில் அசுவினி நட்சத்தில் பிறந்தவர்கள் சு, சே சோ ல என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்கலாம்.பரணியில் பிறந்தவர்கள் லி லு லே லோ என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்கலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அ இ உ எ என்ற எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை வைக்கலாம்.

ரோகினியில் பிறந்தவர்கள் ஒ வ வி வு என்று தொடங்கும் எழுத்துக்களிலும் பெயர் சூட்டலாம்.

மிருகசிரீடம் நட்சத்தில் பிறந்தவர்கள் வே வோ கா கி என்ற எழுத்துக்களிலும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கு க ஞ ச என்ற எழுத்துக்களிலும் பெயர் வைக்கலாம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கே கோ என்ற எழுத்திலும் பூசம் ட, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு டி டூ டே டோ என்ற எழுத்திலும் பெயர் சூட்டலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ம மி மு மெ என்ற எழுத்துக்களில் பெயர் வைக்கலாம். பூரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு மோ ட டி டூ என்ற எழுத்துக்களில் பெயர் வைக்கலாம். உத்திரம் நட்சத்திர குழந்தைக்கு டே டோ ப பி என்ற எழுத்துக்களிலும் ஹஸ்தம் நட்சத்திர குழந்தைக்கு பூ ந ட என்ற எழுத்துக்களில் பெயர் சூட்டலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பே ஓ ர ரி என்ற எழுத்துக்களிலும், சுவாதியில் பிறந்த குழந்தைக்கு ரூ ரே ரோ த ஆகிய எழுத்துக்களிலும் சூட்டலாம். விசாகம் நட்சத்திர குழந்தைக்கு தி து தே தோஎன்ற எழுத்திலும், அனுஷம் நட்சத்திர பிள்ளைக்கு ந நி நு நே என்ற எழுத்திலும் பெயர் சூட்டலாம். கேட்டை நட்சத்திர குழந்தைக்கு நோ, ய,இ, பூ ஆகிய பெயர்களில் சூட்டலாம்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு யே யோ ப பி என்ற எழுத்திலும், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு பூ தா ப டா ஆகிய எழுத்திலும், உத்திராடம் நட்சத்திர பிள்ளைக்கு பே போ ஆகிய எழுத்திலும்,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பிள்ளைக்கு கா என்ற எழுத்திலும் பெயர் சூட்ட வேண்டும்.

அவிட்டம் நட்சத்திர பிள்ளைக்கு 'க கீ கு கூ' என்ற எழுத்திலும், சதயம் நட்சத்திர குழந்தைக்கு 'கோ'என்ற எழுத்திலும் பெயர் சூட்ட வேண்டும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 'தா, தீ' என்ற எழுத்தில் பெயர் வைக்கலாம். உத்திரட்டாதி நட்சத்தில் பிறந்தவர்கள் 'து ஞ ச' என்ற எழுத்துக்களில் பெயர் வைக்கலாம். ரேவதி நட்சத்திரக்கார குழந்தைக்கு 'தே தோ ச சி' என்று பெயர் வைக்கலாம்.

விக்ராந்த்தின் மனைவி யார் தெரியுமா பலரும் அறிந்திடாத தகவல்