2018 புத்தாண்டு பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி

சென்னை: 2018 புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பலன்கள் எப்படி இருக்கும் என்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகாரர்களுக்கு 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பொது பலன்களை அறிந்து கொள்வோம்.

[மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம் , விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்]

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் பூரண சுபரான சகல சௌபாக்கியத்தையும் அள்ளித் தரும் குரு பகவான் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும் நிலையைக் கொடுப்பார்.

பண வரவு அதிகமாக இருக்கும் இந்த ஆண்டு அக்டோபர் மாததிற்குப் பிறகு குருவின் ராசி மாற்றமானது பொருளாதார வகையிலும், குழந்தைகளின் வகையிலும் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்.

மேஷம்

இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பிதுரார்ஜித சொத்துக்களில் வரவைக் கொடுக்கும், தந்தையின் தொழில் சிறப்படையும், வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு முழுவதும் ராகு-கேதுக்கள் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பழைய வீட்டை வாங்கி புதுப்பிப்பதும், வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலையையும் கொடுக்கும். இந்த ஆண்டு சனி, ராகு-கேது பெயர்ச்சி கிடையாது.

ஜனவரி

சூரியன் இம்மாதம் 14ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் இம்மாதம் 17ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் நெருப்பினால் காயம் உண்டாகும். புதன் இம்மாதம் 06ம் தேதி ஒன்பதாம் இடத்திற்க்கு வருகிறார் உயர்கல்வியில் மேன்மை நிலையைக் கொடுக்கும் மேலும் 28ம் தேதி பத்தாமிடத்திற்க்கு வருவது தொழில் சம்பந்தமான படிப்பில் உன்னத நிலையைக் கொடுக்கும். . குரு ஏழாம் இடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையை கொடுக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்திலிருப்பது பெண்களால் நன்மையை கொடுக்கும். இம்மாதம் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருவது தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி இந்த ஆண்டு முழுவதும் ஒன்பதாமிடத்தில் இருப்பது உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடையும் வழியைக் காட்டும். ராகு இந்த ஆண்டு முழுவதும் நான்காமிடத்தில் இருப்பது படிப்பில் கவனம் அதிகம் தேவை என்பதை சுட்டிக் காட்டுகிறது. கேது இந்த ஆண்டு முழுவதும் பத்தாமிடத்திலிருப்பது எல்லா வெற்றியைக் கொடுக்கும்.

பிப்ரவரி

சூரியன் இம்மாதம் 13ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் இம்மாதம் முழுவதும் அஷ்டமத்திலேயே அமர்ந்திருப்பது மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். புதன் இம்மாதம் 15ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். சுக்கிரன் இந்த மாதம் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருவது மனைவியால் பண வரவை அதிகரிக்கச் செய்யும்.

குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் கிடையாது. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். செவ்வாய் 07ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் முன்னோர்களின் சொத்துக்களில் பங்கு கிடைக்கும். புதன் 03ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது படிப்புக்காக அதிகமாக செலவழிக்கும் நிலையைத் தரும். சுக்கிரன் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கச் செய்யும் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது மனதில் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும். குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் வேலை தேடி எதிபார்த்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் சுக்கிரன் 20ம் தேதி இரண்டாமிடத்திற்க்கு செல்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய் புதன், குரு, சனி, ராகு, கேது இம்மாதம் ராசி மாற்றம் இல்லை. பொதுவாக நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் செவ்வாய் 02ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதன் 09ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் 14ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அலுவலக தகவல் தொடர்பு சீரடையும். புதன் 10ம் தேதி மூன்றாம் இடத்திற்கு வருகிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும், 25ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் 09ம் தேதி

நான்காமிடத்திற்கு வருகிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் அரசாங்க ஒதுக்கீட்டின் மூலமாக வீடு மனை ஒதுக்கீடு கிடைக்கும். சுக்கிரன் 05ம் தேதி உங்கள் ஐந்தாமிடத்திற்கு வருகிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே நல்ல தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்

சூரியன் 17ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் அரசாங்க வேலை சம்பந்தமான தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 01ம் தேதி உங்கள் ஆறாமிடத்திற்கு வருகிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும். இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு-கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்

சூரியன் 17ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உத்தியோகம் தொடர்பான பிரச்சினை உண்டாகும் புதன் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 19ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். சுக்கிரன் 01ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த நல்ல பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்

சூரியன் 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். புதன் 06ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் வியாபாரம் விருத்தியடையும் 26ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும். குரு 11ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பண வரவில் தடை உண்டாகும் இந்த மாதம் செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்

சூரியன் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் செயல்பாடுகள் மன கஷ்டத்தைக் கொடுக்கும். செவ்வாய் 06ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீடு மனை நிலம் வாங்கி விற்கும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்

சூரியன் 16ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரமபரை தொழில் சிறப்படையும். செவ்வாய் 23ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ராசி மாற்றம் இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நடிகர்களில் அஜித் முறையாக வரி கட்டுகிறார் பிரபல அரசியல் தலைவர் பாராட்டு