சிம்மம் ராசியின் ரகசியம்! புரிந்த கொள்ள முடியாத புதிரும் நீங்கள்தான்..

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். வீரியமுள்ளவர்கள். அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்கள்.

எட்டி ஓடும் காலத்தை கட்டி இழுத்து வரும் கலை கற்றவர்கள். எதிரிகளை வீழ்த்தி காலில் விழ வைக்கும் தைரியசாலிகள்.

சொந்த காலில் நிற்க வேண்டும் என்பது உங்கள் சித்தாந்தம். பெயரோடு புகழையும். அந்தஸ்த்தோடு அதிகாரத்தையும் பெற துடிப்பவர்கள்.

மூக்கின் மேல் கோவம், தாக்குதல் வார்த்தைகள் என்பதெல்லாம் அவசரகால ஆயுதங்கள். அதை அடிக்கடி பிரயோகிப்பதால் எதிரிகள் எண்ணிக்கை மட்டும் எப்போதும் குறையாது.

ஆனாலும் யானைக்குதான் அடிசறுக்கும். பூனைக்கு சறுக்காது என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள். அதனால் சில சமயம் பூனையாகவும் இருப்பிர்கள்.
வைரத்தை வைரத்தால் அறுக்கணும் என்பது உங்களுக்கு தெரியும்.

உங்கள் வீக்னஸ் என்ன தெரியுமா? முகஸ்துதிக்கு மயங்குறது. நீங்க யாரு இந்திரன் சந்திரன்னு சொல்லிட்டா போதும், பழைய பகையை பரண்மேல் தூக்கி போட்டுட்டு போயே போய்டுவீங்க.

எப்போதுமே முதலாளி தோரணை இருப்பதால் அடங்கி போவதை அவமானம் என்று நினைப்பவர்கள். நம்பர் எண்ணிக்கையில் நம்பிக்கை உள்ளவர்கள். நம்பர் ஒன் தான் உங்கள் கனவே.

தைரியம், சாகசம், பராக்கிரமம், துணிச்சல், அஞ்சாமை, அதிகாரதொனி என்பதெல்லாம் உங்கள் குட பிறந்த சொத்து.

வெட்ட வெட்ட துளிக்கும் சூரன் தலை மாதிரி எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், வெற்றி படைகளை தேடிக்கொண்டே இருப்பவர்கள்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி சொன்ன மாதிரி இன்னொரு விதி செய்வீர்கள். வருமான வாய்ப்புகளை பெருக்கி, ஏளனக்காரர்களை பொசுக்கி, சூரனை வென்ற சாமி மாதிரி சூளுரைத்து நிர்ப்பிர்கள்.

அன்பானவர்களை அரவணைத்து, பாசமானர்களை நேசித்து வாழ கற்று கொண்டவர்கள்.

உங்கள் வாழ்க்கை பாதை யாருக்கும் கட்டுபடாத காட்டாற்று வெள்ளம். புரிந்த கொள்ள முடியாத புதிரும் நீங்கள்தான்.

நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும் இந்த மீனை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுங்க