சனிப்பெயர்ச்சி 2017: மீனம் ராசிக்காரர்களே... மவுனமே சிறந்த மருந்து!

சென்னை: டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

மீனம் ராசிக்கு இதுவரை 9ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி ராசிக்கு 10வது இடத்தில் கருமசனியாக சஞ்சாரம் செய்யப் போகிறார்.

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12வது வது இடம்,4வது இடம், 7 வது இடங்களைப் பார்க்கிறார். பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

மீனம் ராசிக்கு 9வது இடத்தில் இருந்து சனிபகவான் 10வது இடத்திற்கு வருகிறார். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும்.

சனி பகவான் தன்னுடைய 3வது பார்வையாக உங்களின் விரைய ஸ்தானத்தை பார்க்கிறார். ராசிக்கு 4வது இடத்தை பார்வையிடுகிறார். பொறுமை அவசியம். பொறுத்தார் பூமியாள்வார்.
வேலை கசக்கி பிழியும். எனவே உடலில் அசதி ஏற்படும். உறக்க குறைபாடு வரும்.

சனி உங்களின் லாப ஸ்தானாதிபதியாகவும், விரைய ஸ்தானாதிபதியாகவும் இருக்கிறார்.
ராசிக்கு 7வது இடத்தை 10வது பார்வையாக பார்க்கிறார். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில் பங்குதாரர்களுடன் நல்ல உறவை மேம்படுத்துங்கள். கணவன் மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். மவுனம் சிறந்த மருந்து. அதை கடைபிடிங்க மக்களே... தப்புவீங்க.

படிப்பில் அதிகக் கவனம் தேவை. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைப்பதில் சற்று தடையேற்படும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை வெட்டி விடுங்க. அப்பத்தான் தண்டனையில் இருந்து நீங்க தப்புவீங்க. விளையாட்டுகளில் ஆர்வமும் திறமையும் கூடும். கல்விக் கடன்கள் எளிதாகக் கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கப் போராட வேண்டியது வரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும்.


மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல விலக காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும்.
நேர்மையாக இருந்தால் எந்த துன்பமும் உங்களை அண்டாது. நீதிமான் சனிபகவான் நேர்மையாக நடப்பவர்களை எந்த தீங்கும் செய்ய மாட்டார். பசுவிற்கு வாழைப்பழம் கொடுங்க. ஆஞ்சநேயரின் அம்சமாக உள்ள ராகவேந்திரர் ஸ்வாமிகளை வியாழக்கிழமைகளில் வணங்கி வாருங்கள் நன்மையே நடக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் சிலருக்கு உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் யோகமும் ஒரு சிலருக்கு வந்தமையும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய காலமாகும். விசா, பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு விசயங்கள் சாதகமாக அமையும். முதலாளிகளாக ஒரு சிலர் உருவாகும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்தரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் கல்வி பயில வாய்ப்பும். ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பங்கள் வந்து சேரும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு தேவையற்ற விரையங்களும் நஷ்டங்களும் மருத்துவமனை செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக அக்கறை தேவை. மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வணங்கி வாங்க நன்மை ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு சுய தொழில்கள் செய்ய வாய்ப்பு அமையும். புதிய தொழில்கள் தொடங்கவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்கவும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். அமைதியை கடைபிடித்தால் குடும்பத்தில் குதூகலம்தான். சமயபுரம் சென்று மாரியம்மனை மனதார வணங்கி வாங்க நல்லதே நடக்கும்.

என்ன செய்தாலும் டூப்ளிகேட்டை கண்டுபிடிக்கவே முடியாது, கொத்துகொத்தாக இறக்குமதி..!! வாயில் போட்டாலும்