அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று மகர ராசிக்காரர்கள் அச்சம் வேண்டாம்! அதிஸ்டம் உங்கள் கையில்...?

டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

மகரம் ராசிக்கு இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார். உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

சனிபகவான் 12வது இடத்தில் விரைய சனியாக அமைகிறார். ஏழரை சனி ஆரம்பிக்கிறது. பயம் வேண்டாம். 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது.

அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று பயப்பட வேண்டாம்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.

பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி.

எனவே நாவடக்கம் தேவை. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். குடும்பத்தில் சிக்கல் எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருத்தல் நலம். கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கச் சற்று போராட வேண்டியது வரும்.

பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்.

பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும்.

தாடி வச்சா தான் பெண்களுக்கு பிடிக்குமா? வேகமா தாடி வளர இத குடிச்சா போதும்!