உங்களது ராசிக்கு லக்கி கலர் என்ன?... வாங்க தெரிஞ்சிக்கலாம்

வண்ணங்களுக்கும் எண்ணங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. வண்ணங்களுக்கும் அதிஷ்டத்திற்கும் தொடர்பு உண்டு. எனவேதான் காலையில் ராசி பலன் சொல்லும் போதே ஒருவர் அன்றைக்கு அணியவேண்டிய ஆடைகளின் நிறத்தையும் கூறுகின்றனர்.

எந்த நாட்களில் என்ன கலர்

 

  • ஞாயிறன்று சிவப்பு, இளம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணியலாம்.
  • திங்கட்கிழமையன்று வெண்மை மற்றும் இளம் ஊதா நிறம் சுபம் தரும்.
  • செவ்வாய் கிழமைகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் அணியலாம்.
  • புதன்கிழமையில், பச்சை நிறத்தில் அணியலாம்.
  • வியாழக்கிழமை மஞ்சள் நிறம் உகந்தது.
  • வெள்ளியன்று கடல் நீலம், வெண்மை நிறம் அணியலாம்.
  • சனிக்கிழமை நீலம், கருப்பு நிற ஆடை அணியலாம்.

 

மேஷம் - சிகப்பு

செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் தைரியம் மிக்கவர்கள். சூரியன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். இவர்களுக்கு இரத்தச் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்டர்வியூ, வேலை, ஏதாவது முக்கிய நபரை சந்திக்க செல்லும் போது சிவப்பு நிற ஆடை அணிந்து சென்றால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

ரிஷபம் - வெண்மை

ரிஷப இராசிகாரர்களுக்கு சுக்கிரன் ராசி அதிபதி. சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். வெண்மை, சில்வர் நிறம் உகந்தது. இந்த ராசிக்காரர்கள் இந்த நிறம் கொண்ட ஆடைகளை அணிந்து செல்வது அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த ஆண்டு வெளிர் நீல நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் நிறமாகும்.

மிதுனம் - பச்சை

மிதுனம் ராசியின் ஆட்சி கிரகம் புதன். புதனுக்கு உகந்த நிறம் பச்சை. இந்த ஆண்டு நீங்கள் பச்சை நிற ஆடை, பச்சை நிறம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வெற்றி தேடி வரும்.

கடகம் - நீலம், வெண்மை

சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே. உங்களுக்கு வெண்மை, நீலம், கடல் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். இந்த நிற ஆடைகளை அணிந்து சென்றால் வெற்றி நிச்சயம்.

சிம்மம் - பொன்நிறம்

சூரியனை ஆட்சி வீடாக கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்நிறம் ஏற்றது. முக்கியமான நபர்களை சந்திக்க செல்லும் போது, முக்கியமான தேர்வு, நேர்முகத்தேர்வுக்கு செல்லும் போது பொன்நிற ஆடைகளை அணிந்து செல்லலாம்.

கன்னி - ஊதா, பச்சை, மஞ்சள்

கன்னி ராசிக்காரர்களின் ஆட்சி, உச்ச கிரகமாக புதன் திகழ்கிறார். அவருக்கு பிடித்தமானது பச்சை. புதன்கிழமை பச்சை ஆடை அணியலாம். பிற நாட்களில் இளம் ஊதா, இளம் மஞ்சள் அணியலாம்.

துலாம் - நீலநிறம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஆட்சி கிரகம். வெள்ளிக்கிழமைகளில் கிரீம் நிற ஆடை அணியலாம். சனி உச்சம் பெற்ற வீடு என்பதால் பிற நாட்களில் நீல நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.

விருச்சிகம் - சிவப்பு, ஊதா, பச்சை

விருச்சிகம் செவ்வாய் பகவான் ஆட்சி வீடு. இந்த ராசிக்காரர்கள் செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடையும், பிற நாட்களில் ஊதா, பச்சை நிற ஆடையும் அணியலாம். அதிர்ஷ்டம் தேடி வரும்.

தனுசு - மஞ்சள்

தனுசு குருபகவானின் ஆட்சி வீடு. இந்த ராசிக்காரர்கள் மஞ்சள் நிற ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கும். முக்கியமாக வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணியலாம்.

மகரம் - கருநீலம்

மகரராசியில் சனி பகவன் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். செவ்வாய் பகவான் உச்சம் பெறுகிறார். சாம்பல் நிறம், கருநீலம், நீல நிறம் ஆடைகள் அணிவது அதிர்ஷ்டத்தை தரும்.

கும்பம் - ஊதா, கருநீலம்

கும்பம் ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இந்த ராசிக்காரர்கள் பொதுவாக ஊதா நிறம் அணியலாம். சனிக்கிழமைகளில் கருநீல ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

மீனம் - வெண்மை, இளமஞ்சள்

மீனம் ராசியில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். சுக்கிரன் உச்சம் பெறுகிறார். வெண்மை, இளம் மஞ்சள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் நிறமாகும். இந்த நிற ஆடைகளை அணிவது கூடுதல் சிறப்பு.

மக்களை அதிர வைத்த அந்த ஃபிளாஷ் நியூஸ்!