சனி ஆழப்போகிறார்..? குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா..

இந்த வார ராசி பலன்கள் (01-12-2017 – 7-12-2017 ) மேஷம்சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீகத் தொழில் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.

ரிஷபம்சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமன் செயல்கள் மன சங்கடத்தை கொடுக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மிதுனம்சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வேலையில் கடுமையான உழைப்பு தேவைப்படும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகள் நீங்கள் சொன்ன பேச்சை கேட்பார்கள். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

கடகம்சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தேர்வில் சிறந்த மதிப்பெண் கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு நிலம் வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார்.வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.

சிம்மம்உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

கன்னிசூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க காரியத்திற்க்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வ நிலை சிறப்படையும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயத் தொழில் சிறப்படையும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களால் நன்மை உண்டாகும்.

துலாம்சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கௌரவமும் புகழும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 02-12-2017 அன்று மாலை 05-27 மணி முதல் 04-12-2017 அன்று மாலை 04-49 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் எளிதாக முடியும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு மனை வகைகளில் முதலீடு செய்வீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.
சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக அழகு அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்க்கும் பணம் கிடைக்க தாமதம் ஆகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். 04-12-2017 அன்று மாலை 04-49 மணி முதல் 06-12-2017 அன்று பகல் 04-31 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

தனுசுசூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவி வகையில் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். 06-12-2017 அன்று பகல் 04-31 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

மகரம்சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்கும்..

சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரையங்களில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்திலிருந்து வருமானம் வரும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

மீனம்சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை தொழில் மேன்மை அடையும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும்.
உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பணம் கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

கேஸ் சிலிண்டர் ஏன் வெடிக்கிறது! எவ்வாறு உயிரை பாதுகாத்துக்கொள்வது?