தனுசு ராசிக்காரர்களுக்கு நிம்மதியான காலம்! உங்களுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்...

தனுசு ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ராசிக்கு 3வது இடம், 7வது இடம், 10வது இடத்தை பார்க்கிறார்

அடிக்கப் போகும் அதிஷ்டம்...

ஜென்மசனி என்றாலும் இது ஏழரை சனியின் இரண்டாவது கால கட்டமாகும். விரைய சனியாக இருந்த சனிபகவான் ஜென்மசனியாக தொடர்கிறார். 11வது இடத்தில் இருக்கும் குரு பகவானில் நன்மையே கிடைக்கும்.

சனிபகவான் 3வது ஸ்தானத்தை 3வது பார்வையாக பார்க்கிறார். எனவே இளைய சகோதரர்களிடம் கவனம் தேவை. 7வது பார்வையாக ராசியின் 7வது இடத்தை பார்க்கிறார்.10வது பார்வையாக தொழில் ஸ்தானத்தை சனிபகவான் பார்க்கிறார். இல்லத்தரசிகளுக்கு ஏற்றமான காலம். தசாபுத்திகள் நன்றாக இருந்தால் நல்லதே நடக்கும்.

உயர்கல்வியில் தடை ஏற்படும். எனவே கல்வியில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க பழகுதல் வேண்டும். எதிர்பார்த்த கல்வி கடன் கிடைக்கும்.

விநாயகப் பெருமானை வழிபடுங்கள்..

போக்குவரத்து வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையாகச் சென்று வருதல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும்.

அடிவயிறு கால், பாதம், போன்ற உடல் உறுப்புகளில் கவனம் தேவை. ஈச்சனாரி விநாயகப் பெருமானை வழிபடுங்கள். ஏழரை சனியினால் ஏற்படும் துன்பங்கள் விலகிடும்

அன்று சிறுமியை சிதைத்தவன்.. நேற்று பெற்ற தாயையே... இப்படியும் ஒரு கொடூரமா தமிழகத்தில்..?