உப்பு உருண்டை கொழுக்கட்டை கொழுக்கட்டை செய்வது எப்படி?

 

தேவையானவை:  புழுங்கல் அரிசி - ஒரு கப், பச்சை மிளகாய், பெரிய வெங் காயம், துருவிய இஞ்சி - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். புழுங்கல் அரிசியை ஊற வைத்து, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். அதில் துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மாவைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவைச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைக்கவும்.