வடிவேலுவின் மகளுக்கு திருமணம் முடிந்தது- மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளிவந்த திருமண வீடியோ

மதுரை ஐராவதநல்லூரில் உள்ள என்.எஸ்.சந்திர அம்மாள் திருமண மண்டபத்தில், வடிவேலுவின் மகள் கலைவாணிக்கும் ராமலிங்கம் என்பவருக்கும் திருமணம் நடந்தது.இந்தத் திருமணம் குறித்து அந்தப் பகுதியில் எந்தப் பேனரும் வைக்கப்படவில்லை. அரசியல், திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களில், நகைச்சுவை நடிகர் பூச்சி முருகன் மட்டும் தென்படுகிறார். புகைப்படங்களைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்துக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. திருமணம் எளிமையான முறையில் நடக்கிறது, தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறி அனுப்பியுள்ளனர்.