இதயம் தாங்குமா? தளுதளுத்த குரலில் கலைஞரின் இழப்புக்கு கண்களை குளமாக்க பாடிய சூப்பர்சிங்கர் செந்தில்

சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ். இவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடி பிரபலமானார்கள்.

சினிமாவிலும் பாடத்தொடங்கிய செந்தில்கணேஷ் தற்போது மறைந்த கலைஞருக்காக அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னுடைய கம்பீரமான குரலால் தளுதளுக்க பாடியுள்ளார்.

கலைஞர் அய்யா இரங்கல் செய்தி இதயம் தாங்குமா என்று தொடங்கும் இந்த பாடலில் அவரின் பெருமையையும், இழப்பின் வலியையும் கூறியுள்ளார்.

இதனையும் புடியுங்க.. கருணாநிதி சமாதிக்கு முதல் முறையாக வந்த மூத்த மகன் மு.க முத்து: கண்ணீருடன் செய்த செயல்

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்

உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி காலமானார்.

கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மொத்த குடும்ப உறுப்பினர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

ஆனால் சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து மட்டும் சமாதிக்கு வராமல் இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மு.க முத்து தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

அவரால் சரியாக நடக்க முடியாததால் சிலர் கைதாங்கலாக முத்துவை அழைத்து வந்தனர்.

அஞ்சலிக்கு பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கியபடியே நின்றார் முத்து.