விமல் ஆனந்தி மிரட்டும் மன்னர் வகையறா டீசர்

விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மன்னர் வகையறா’. பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தில் 'கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். 

பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், நாசர், ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, யோகிபாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

 

இந்தப் படத்தை, ‘ஏ3வி’ நிறுவனம் மூலம் விமலே தயாரித்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசர் வீடியோ உங்களுக்காக...

விஜய் கிடையாது, அந்த ஒரு விஷயத்தில் அஜித் தான் பர்ஸ்ட் பிரபல நடிகர்