ஒரே நாளில் ஒரு கோடியே 89 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்திழுத்த ஜூராசிக் பார்க் டிரெய்லர்

டைனோசர்களைப் பற்றிய படமான 'ஜுராசிக் பார்க்' 1993-ம் ஆண்டு வெளியாகி உலக ரசிகர்களை அலற வைத்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்தப் படம் மூன்று ஆஸ்கர் விருதுகள் உட்பட 20 விருதுகளை வென்றது.

'ஜுராசிக் பார்க்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டைனோசர்களின் வெவ்வேறு வகைகளைப் பற்றிய 'ஜுராசிக் பார்க் 2', 'ஜுராசிக் பார்க் 3' ஆகிய படங்களும் வெளிவந்தன.

2015-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தின் அடுத்த பாகமாக வெளிவர இருக்கும் 'ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம்' படத்தின் ட்ரெய்லர் யூ-டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாட்களிலேயே இந்த ட்ரெய்லருக்கு 18 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன.

உயிர்த்தெழும் எரிமலை 
ஜுராசிக் வேர்ல்டு

முந்தைய பாகத்தில் ஜுராசிக் வேர்ல்டு பூங்காவையே டைனோசர்கள் அழித்துவிடும். அந்தப் பூங்காவிலிருந்து அனைவருமே தப்பித்துவிடுவார்கள். அந்தப் பூங்கா அமைந்திருக்கும் தீவில் உள்ள எரிமலைகள் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பிக்கின்றன.

 

மீண்டும் பூங்காவிற்குள் 
கிறிஸ் பிராட்,

அதனால், அந்த ஜுராசிக் வேர்ல்டு பூங்காவிற்குள் உயிரோடு இருக்கும் மீதமுள்ள டைனோசர்களைக் காப்பாற்ற கிறிஸ் பிராட், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் ஆகியோர் மீண்டும் பூங்காவிற்குள் செல்கிறார்கள்.

 

எரிமலை வெடிப்பு 
ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம் கதை

கிறிஸ் பிராட், அவர் ஆசையாக வளர்த்த ரேப்டாரை தேடிக் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறார். அவர்கள் பூங்காவிற்குள் நுழைந்து தேட ஆரம்பிக்கும் போது எரிமலையும் வெடித்துச் சிதற ஆரம்பிக்கிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் ஜுராசிக் வேர்ல்டு : ஃபாலன் கிங்டம் படத்தின் கதை.

 

பிரமாண்ட படம் 
ட்ரெய்லர்

2 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் ட்ரெய்லர் பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. வெளியான இரண்டு நாட்களிலேயே இந்த ட்ரெய்லருக்கு 18 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. முந்தைய ஜுராசிக் சீரிஸ் படங்களை விட இந்தப் படம் எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கப் போகிறது என்பது படம் வெளியான பிறகே தெரியும்.


ரசிகர்கள் காத்திருப்பு 
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்தப் படத்தை ஜே.ஏ.பயானோ இயக்குகிறார். இந்தப் படம் 2018 ஜுன் மாதம் 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தைப் பார்க்க ஹாலிவுட் பிரியர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

இந்த 5 ராசிக்காரங்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமாம் - ஏன் தெரியுமா?