சண்டக்கோழி 2 திரை விமர்சனம்

நடிகர் விஷாலுக்கு சினிமா பயணத்தில் மறக்கவே முடியாத ஒரு படம் சண்டக்கோழி. படு வெற்றிபெற்ற இப்படத்தை அதே கூட்டணியில் லிங்குசாமி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்த 2ம் சண்டக்கோழி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே பிரமாண்டமாக ஊர் திருவிழா நடக்கின்றது. இதில் சாப்பாடு பரிமாறுவதில் பிரச்சனை நடந்து வரலட்சுமியின் கணவர் ஒருவரை வெட்டி சாய்கின்றார்.

அந்த இரத்த ஈரம் காய்வதற்குள் வரலட்சுமி கணவரையும் வெட்டுகின்றனர். அப்போதே வரலட்சுமி தன் கணவரை கொன்றவர்கள் குடும்பத்தில் இருப்பவர் அனைவரையும் வெட்டி சாய்க்க ஒருவர் மட்டும் மீதம் இருக்கின்றார்.

பிறகு 7 வருடங்களுக்கு பிறகு திருவிழா மீண்டும் நடக்க, அந்த மீதம் ஒருவரை வரலட்சுமி கொல்ல காத்திருக்க, இதை விஷால் எப்படி முறியடித்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் ஆக்‌ஷன் படத்திற்கு அளவெடுத்து செஞ்சது போல் உள்ளார். ஆறடிக்கு நின்று 50 பேரை அடித்தால் கூட நம்பலாம் போல, இவர் ஒரு பக்கம் என்றால் ராஜ்கிரன் மறுபக்கம், அவரின் பேவரெட்டான எழும்பு கடியில் ஆரம்பித்து ஏரிலேயே நிற்க வைத்து அடியாட்கள் எழும்பை உடைப்பதும் சரி செம்ம மாஸ்.

கீர்த்தி சுரேஷ் அப்படியே மீரா ஜாஸ்மின் ஜெராக்ஸ் தான், கலகலப்பான பெண் கதாபாத்திரத்தில் கலக்குகின்றார். ஆனால் ஐயாவின் மகன் விஷால் என்று தெரியாமல் ட்ரைவர் நினைத்துக்கொண்டு அவர் சீண்டுவது எல்லாம் பல படத்தில் பார்த்த காட்சி போல் உள்ளது.

வரலட்சுமி வரும் காட்சிகள் எல்லாம் செம்ம சவுண்ட் விடுகின்றார், கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினாலும் திமிரு படத்தில் பார்த்தது போலவே தான் உள்ளது.

ஆனால், லிங்குசாமி தேவர்மகன் படத்தின் மூலம் செம்ம இன்ஸ்பிரேஷன் ஆகியிருப்பது தெரிகின்றது, பல காட்சி அமைப்புகள், பில்டப் காட்சிகள் விஷால் எண்ட் ரீ கூட அப்படியே உள்ளது. பார்த்து பழகி போன மாஸ் காட்சிகள். அதிலும் பேருக்கு தான் சண்டக்கோழி இரண்டாம் பாகம், மற்றபடி அதற்கும் இதற்குமான கனெக்‌ஷன் காட்சிகள் பெரிதாக ஏதும் இல்லை. வேறு டைட்டில் வைத்து ரிலிஸ் செய்திருந்தாலும் பெரிதும் பாதித்திருக்காது.

இரண்டாம் பாதியில் ராஜ்கிரண் இல்லாமல் விஷால் திருவிழா நடத்தும் காட்சி எல்லாம் ரசிக்க வைத்தாலும் அநியாயத்திற்கு லாஜிக் மீறல். அதிலும் இரண்டாம் பாதியில் லாலின் எண்ட் ரீ ஏதோ மிகப்பெரிய திருப்பம் என்றால் அதையும் காமெடியாக்கியது, சண்டக்கோழி முதல் பாக ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

படத்தின் மாஸ் காட்சிகளை எல்லாம் இன்னும் பல மடங்கு மாஸ் ஏற்றுவது யுவனின் பின்னணி இசை, ஆனால் கம்பத்து பெண் தவிர மற்ற அனைத்து பாடல்களிலும் யுவன் பெயில்ஸ் தான். ஒளிப்பதிவு கலர்புல் தான்.

க்ளாப்ஸ்

திருவிழா திரையில் மட்டுமில்லாமல் ஏதோ மக்களே கொண்டாடுவது போல் பல நடிகர், நடிகைகள் வைத்து எடுத்த விதம்.

படத்தின் ஸ்டண்ட் காட்சிகள், மாஸ் பட ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.

யுவனின் பின்னணி இசை, அதிலும் குறிப்பாக வரலட்சுமிக்கு வரும் பிஜி எம்.

விஷால் ராஜ்கிரண் அப்பா மகன் எமோஷ்னல் காட்சிகள்.

பல்ப்ஸ்

முதல் பாகத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ஏதோ விளம்பரத்திற்காக வைத்த டைட்டில் போல் உள்ளது.

லாஜிக் மீறல்கள் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

மொத்தத்தில் மாஸ் மசாலா ரசிகர்களுக்கு ட்ரீட் தான், லிங்குசாமி இஸ் பேக்.