மண்டையை சொரியும் ரசிகர்கள் ஸ்கெட்ச் திரைவிமர்சனம்

சியான் விக்ரம் – தமன்னா நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது ஸ்கெட்ச் திரைப்படம். இந்த படத்தில் வட சென்னையில் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் விக்ரம். ட்யூ கட்டாத நபர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார். இதற்கு விக்ரமின் நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நடிகை தமன்னா அய்யர் வீட்டு பெண்ணாக வருகிறார். வழக்கம் போல ஹீரோயினை துரத்தி துரத்தி லவ்வுகிறார் ஹீரோ.

வழக்கம் போல காதல் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, தன்னுடைய எதிரி கேங் R.K.சுரேஷுடன் அடிக்கடி முட்டி மோதுகிறார் விக்ரம். ஒரு கட்டத்தில் பிரபல தாதாவாக வரும் குமாரின் காரையே ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறார். படத்தின் கதை அங்கே ஆரம்பாமாகிறது. இந்த சிக்கல்களுக்கு யார் காரணம் என்பதை க்ளைமாக்ஸ் காட்சிவரை நீட்டி நெளித்து சற்றும் எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ்  காட்சியுடன் முடிக்கிறார் இயக்குனர் விஜய் சந்தர்.

ஸ்கெட்ச் போட்டு வண்டிகளை தூக்குவது, நண்பர்கள், சென்டிமென்ட் என பல காட்சிகள் ரசிகர்களை கவரும் வண்ணம் எடுத்துள்ளார்கள். ஹீரோயினுக்கு எந்த முக்கியத்துவமும் இந்த படத்தில் கிடையாது. இருந்தாலும், தன்னுடைய கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார் தமன்னா.

பாடல்கள் எதற்கு வைத்தார்கள், ஏன் வைத்தார்கள்..? என்பதை படக்குழு தான் விளக்க வேண்டும். பாட்ட போட்டய்ங்களா..? என ரசிகர்களை உச் கொட்டி மண்டையை சொரிய வைத்துள்ளார். புதிதாக எதையும் படத்தில் காட்டவில்லை. படத்தின் பெயரை மட்டும் ஸ்கெட்ச் என வைத்துவிட்டு திரைக்கதைக்கு ஸ்கெட்ச் போடாமல் விட்டுவிட்டார்கள். காலம் காலமாக பார்த்து சலித்துப்போன மசாலா படம் தான் இந்த “ஸ்கெட்ச்”.

தீபாவை நம்பி மோசம் போனேன் கண்ணீர்வடிக்கும் முட்டை வியாபாரி