தங்கர் பச்சானின் களவாடிய பொழுதுகள் திரை விமர்சனம்

காதலை இவ்வளவு மென்மையாகவும், உணர்வுபூர்வமாகவும், அழுத்தமாகவும் ஒளிஓவியர் தங்கர்பச்சானால் மட்டுமே சொல்ல முடியும். அழகி படத்திற்குப் பிறகு பார்ப்பவர்களின் மனதை இப்படம் களவாடப் போவது நிச்சயம்.

காதலை பொழுதுபோக்கிற்காகவும், காமத்திற்காகவும் மட்டுமே என்று நினைப்பவர்களுக்கு இப்படம் செறுப்படி கொடுக்கும்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று பிரவுதேவாவின் மகிழுந்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம். படத்தில் அவருடைய கதாபாத்திரமும் பெரும்பாலும் அதையே பிரதிபலிக்கிறது. 

சாலையில் அடிபட்டிருக்கும் பிரகாஷ்ராஜை ஓடிச்சென்று காப்பாற்றுவது, தன் முன்னாள் காதலியை கண் கொண்டு காண முடியாமல் தவிப்பது, தவிர்பபது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

தன் முன்னாள் காதலனிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பூமிகாவும் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பிரபுதேவாவும் இவன் ஏன் உதவியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் என்று புரியாமல் புலம்பும் பிரகாஷ்ராஜும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்துகிறார்கள்.

கள்ளக்காதல், காதலி வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை அல்லது கொலை, மனைவி முன்னாள் காதலனுடன் ஓட்டம் என்று தினசரி பத்திரிகையில் வரும் செய்திகளைப் பார்ப்பவர்களுக்கு காதல் என்பது விளையாட்டாக தோன்றும்.

ஆனால் இப்படம் காதல் என்பது ஏதோ விளையாட்டல்ல வாழ்வில் எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் ஆற்றின் நீரோட்டம் போல் நம்முடைய வாழ்க்கையை அதன் போக்கிலேயே கடக்க வேண்டும் என்பதையும் காதலில் வலியும் உணடு என்பதையும் எளிமையாக சொல்கிறது.

தமிழ் நாட்டின் இன்றைய அரசியல் நிலைக்கு அப்படியே பொருந்திப்போகிறது கஞ்சாகருப்பு பேசும் வசனங்களும் மற்றும் மதுக்கடையை அடித்து நொறுக்கும் காட்சிகளும்.

நெடுஞ்செழியன்,ஜெயந்தி, யாழினி, பிரபாகரன் என்ற தமிழ்ப் பெயர்களை இவர் போன்ற படங்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

சத்யராஜ் ஒரு காட்சியில் வந்தாலும் இன்றைய ஊடகங்களின் போக்கை கடுமையாக கண்டிக்கிறார். இப்போதெல்லாம் வரும் படங்களில் பாடலின் வரிகள்மனதை சென்றடைவதில்லை.

பரத்வாஜின் இசையில் சேரன் எங்கே பாடலும், அழகழகே பாடலும் மனதை விட்டு அகல மறுக்கின்றது. இதில் பாடல் வரிகள் தெளிவாக புரியும் படியும் மனதில் பதியும்படியும் உள்ளது.

பிரவுதேவாபும், பூமிகாவும் தனிமையில் சந்திக்கும் காட்சிகளில் இவர்கள் தவறு செய்யப்போகிறார்கள் என்று நினைக்கும் போது அதை அழகாக கடந்து செல்கிறார் இயக்குனர். 

முக்கியமாக இறுதிக் காட்சியில் பூமிகாவை பிரபுதேவா தனிமையில் சந்திக்கும் போது நிச்சயம் ஏதோ தப்பு நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கும் ரசிகனை மண்டையில் தட்டி உட்கார வைக்கிறார்.

காதலில் இவ்வளவு நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருந்துவிட்டால் நாட்டில் கொலை ஏது குற்றங்கள் ஏது.

ஏன் இத்தனை இத்தனை ஆண்டு காலம் இப்படம் வெளிவரவில்லை என்ற கேள்விக்குள் போகாமல் படத்தின் உள்ளே நாம் சென்றால் நம் மனதை பறிகொடுப்போம். 

காதலித்து தோற்றவர்களும் அல்லது ஜெயித்தவர்களும் யாராக இருந்தாலும் இப்படத்தைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் சிந்துவது நிச்சயம். இன்னும் எத்தனை ஆண்டு காலம் கழித்து இப்படம் வந்திருந்தாலும் காதலர்களின் மனதை களவாடியிருக்கும்.

நயன்தாரா கையில் பிரபு என்று இருந்த டாட்டூ பொசிட்டிவிட்டியாக மாற்றம்