விக்னேஷ் சிவன் குடும்பத்தினருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போது தளபதி விஜயுடன், தளபதி 63, சூப்பர் ரஜினியுடன் 167 போன்ற படங்களில் கமிட்டாகி படு பிசியாக இருக்கிறார்.

என்ன தான் பிசியாக இருந்தாலும், ஏதேனும் ஒரு நல்ல நாள் என்றால் நயன்தாரா தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் எங்காவது சென்று வருவார். அது தொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவார்.

அந்த வகையில் நயன்தாரா இந்த தமிழ் புத்தாண்டனை விக்னேஷ் சிவன் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் நயன்தாரா விக்னேஷ் சிவனின் அம்மாவின் கையை பிடித்துள்ளதைக் கண்ட இணையவாசிகள், இப்போதிலிருந்தே மாமியாரை நயன்தாரா நன்றாக பார்த்து கொள்கிறார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.