மகாலட்சுமி நாத்தனாரை மணக்கப் போகும் மதன்.. நடுவுல பொள்ளாச்சி கும்பல் போல காமலீலைகள்

சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியல் இரு வேறு திசையில் பயணிக்கிறது. பகலில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலின் மகாலட்சுமி பேருக்காகவே சென்டிமென்டா மக்கள் பார்க்க ஆரம்பிச்சு இருக்காங்க.

வழக்கமா குடும்பம், காதல், திருமணம், சண்டை சச்சரவுன்னு எல்லா சீரியளிலும் காண்பிப்பது போலத்தான் இதிலும் காட்சிகள். ஏதாவது சின்ன சின்ன வித்தியாசம். அதை காமிச்சுட்டா மக்கள் அந்த சீரியலில் கவனம் செலுத்தி பார்க்கறாங்க.

இரு வேறு திசைன்னு சொன்னது என்னன்னா...மதன்குமார் மகாலட்சுமியின் நாத்தனார் ஆர்த்தியை கல்யாணம் செய்துக்க போறான். ஆனா, இதுக்கு நடுவுல மதன் காதல் லீலைகள் பொள்ளாச்சி ரவுடி கும்பல் செய்த மாதிரி இருக்குதுங்க. மதனும் இப்படித்தான் பக்கா ரவுடி மாதிரி இருக்கான்.

சித்தாள்

ஒரு கிராமத்துக்கு கட்டிடம் கட்ட போயிருக்கான் மதன்குமார். அங்க பார்வதி சித்தாள் வேலை செய்யறா. அம்மா அப்பா இல்லாத பார்வதி பாட்டி வளர்ப்பு. இவளை எப்படியாவது ஏமாத்தி அடையணும்னு மதன்குமார் திட்டமிட்டு பல காரியங்கள் செய்யறான்.

கோயிலில் குங்குமம்

நீங்க பெரிய பணக்காரங்க, படிச்சவுங்க.. சாதாரண சித்தாள் வேலை பார்க்கற என்னை காதலிக்கறேன்னு சொல்றீங்க. இதெல்லாம் நடக்காது. தயவு செய்து என்னை விட்ருங்கன்னு கெஞ்சறா பார்வதி. திடீரென்று கோயிலுக்கு அழைச்சுகிட்டு போயி, அவளின் நெற்றியில் குங்குமம் வச்சு சத்தியம் செய்யறான் மதன் குமார்.

பாட்டி இல்லை

பார்வதியின் வீட்டைத் தேடி வந்து காதல் வசனம் பேசறான் மதன். பாட்டி வீட்டுல இல்லை, கோயிலுக்கு போயிருக்காங்க. பாட்டிக்கு தெரிஞ்சா என்னை மாதிரி பேசிகிட்டு இருக்க மாட்டாங்க. எடுத்த உடனே அடிச்சுடுவாங்க.. கெளம்புங்கன்னு சொல்றா.

குடு

இவ்ளோ தூரம் உன் வீட்டை தேடி கண்டு பிடிச்சு வந்திருக்கேன்.. சும்மா போறதா, நான் கேட்கறதை குடுன்னு சொல்றான் மதன். என்னன்னு பார்வதி கேட்க, கட்டிப் புடிச்சு ஒரு முத்தம் குடு.. உடனே போயிடரேன்னு சொல்றான்.

முடித்தான்

அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்.. கிளம்புங்கன்னு பார்வதி சொல்லிவிட்டு, தடுமாறி விழ தாங்கிப் பிடிக்கிறான் மதன். அப்புறமென்ன, கட்டிப்பிடிக்க முடியாது என்றவளை, கட்டிப் பிடிச்சு எல்லாத்தையும் முடிச்சான் மதன்.இப்படியே இருவரும் ஒரு மாதம் சுற்றித் திரிகிறார்கள்.

வெறும் குமார்

மதன் பார்வதியிடம் தான் செய்த லீலைகளை நண்பர்களிடம் சொல்லி, சிரிக்கிறான். இந்த நண்பர்கள் பரவால்ல, பொள்ளாச்சி ரவுடி கும்பல் மாதிரி இல்லை. என்னடா.. பாவம் ஏழைப் பொண்ணு... அவளை இப்படி ஏமாத்திட்டியேன்னு சொல்றாங்க. இங்க கல்யாண ஏற்பாடு செய்யறாங்க என்னடா பண்ண போறேன்னு கேட்கறாங்க. கல்யாணம் பண்ணிக்கவா பழகினேன். கிடைச்சுது தூண்டில் போட்டேன், அனுபவிச்சேன்னு சொல்றான். அவ தேடி வந்தா என்னடா செய்வேன்னு நண்பர்கள் கேட்க, அவளை பொறுத்த வரைக்கும் நான் மதன் குமார் இல்லைடா. வெறும் குமார்தான். சிம் கார்டு கூட அப்படித்தான் வங்கினேன்னு சொல்றான்.

பட்சி

பேசிக்கொண்டு இருக்கும்போதே பார்வதி போன் செய்யறா. யாருடா உங்க அமாவான்னு நண்பர்கள் கேட்க, இல்லைடா பட்சின்னு சொல்றான். பட்சியா அப்டீன்னான்னு கேட்டதுக்கு, பட்சின்னா பார்வதிதான்னு சொல்லி ஸ்பீக்கரில் போட்டு பேசறான். அவ, உங்க வீட்டுல நம்ம விஷயத்தை பத்தி சொன்னீங்களா.. நாம பழக ஆரம்பிச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆயிருச்சுங்கன்னு அழறா.

நல்ல செய்தியுடன்

பார்வதி எதுக்கு அழற.. நான் ஊருக்கு வரும்போது நம்ம கல்யாணம் பத்தின நல்ல செய்தியோடத்தான் வருவேன்னு சொல்லிட்டு, சிம்கார்டை எடுத்து உடைத்து போடுகிறான். இங்கு மகாலட்சுமி வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்த உடைகள், மோதிரம், பிரேஸ்லெட்டுக்கு அளவு குடுக்கறான். கூடவே கல்யாணம் பண்ணிக்கப் போற ஆர்த்தியைப் பார்த்து ஜொள்ளு விடறான்.

எப்படிங்க... ரவுடிங்க மூஞ்சியில் ரவுடின்னு அப்படியே எழுதி ஒட்டியிருக்கு. அந்த களை மதன்குமாறாக நடிக்கும் நடிகரின் முகத்தில் தாண்டவமாடுது.