அரிச்சந்திரன் பரம்பரையா இருந்தா இதுக்கு ரிப்ளை போடுங்க ஆவேச வீடியோ வெளியிட்ட ஜூலி

சென்னை: தன்னைப் பற்றி தரக்குறைவாக கமெண்ட் வெளியிடுபவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வீரத்தமிழச்சியாக அடையாளம் காணப்பட்டவர் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதத்தால் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு, சின்னத்திரை தொகுப்பாளினியாகவும், சில தமிழ்ப் படங்களில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.

பதிவுகள்: 
தரக்குறைவான பதிவுகள்:

ஆனால் ஜூலியின் ஒவ்வொரு பதிவிற்குமே சிலர் ஓவியா ஆர்மி என்ற பெயரில் தரக்குறைவான பதிவுகளை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜூலி வாழ்த்து தெரிவித்து வெளியிடும் பதிவிற்கு கூட, வசவுகளையே அவர்கள் பதிலாக பதிவிடுகின்றனர். அதோடு ஜூலியின் புகைப்படங்களை மீம்ஸ் டெம்ப்ளேட்டாகவும் பயன்படுத்துகின்றனர்.

 

தாக்குதல்: 
விளக்கம்:

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜூலியின் நண்பர் காவலரைத் தாக்கியதாக ஒரு செய்தி வெளியானது. இதில், சம்பந்தப்பட்ட நபரை விடுத்து ஜூலியையே பலரும் திட்டினர். இதனால் நடந்த சம்பவம் குறித்து ஒன்இந்தியாவிற்கு அவர் விளக்கமாக பேட்டிகூட அளித்திருந்தார்.

 

மனவேதனை: 
ஜூலி மனவேதனை:

ஆனாலும் தொடர்ந்து அவரது சமூகவலைதளப் பக்கங்களில் பலர் கடுமையாக திட்டி பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதனால் மன வேதனை அடைந்த ஜூலி தனது பக்க நியாயத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், 'நீங்கள் இப்படி திட்டும் அளவிற்கு நான் அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கோரிக்கை: 
உருக்கமான கோரிக்கை:

கூடவே, 'உங்களில் யார் இதுவரை ஒரு பொய்கூட சொல்லவில்லையோ, அவர்கள் இதற்கு பதில் கமெண்ட் போடுங்கள். உங்களில் தரமான கமெண்டுகளைப் பார்த்து நான் பல தவறுகளைத் திருத்திக் கொண்டுள்ளேன். ஆனால், அதற்காக இப்படி மோசமாக கமெண்ட் போடாதீர்கள்.

 

மனது வலிக்கிறது: 
ஆறுதல் பதிவுகள்:

நானும் உங்களுக்கு ஒரு சகோதரி மாதிரி தானே. ஏன் என்னை இப்படி திட்டுகிறீர்கள். உங்களது கமெண்ட்டுகளைப் பார்க்கும்போது எனக்கு மனது வலிக்கிறது' என மிகவும் உருக்கமான வீடியோ பதிவை அவர் வெளியிட்டுள்ளார். ஜூலியின் இந்த வீடியோவைப் பார்த்து மனம் மாறிய பலர், அவருக்கு ஆதரவாக, ஆறுதலாக பதில் பதிவிட்டுள்ளனர்.

 

தேவையில்லாத பதிவு: 
திருந்தாத ஜென்மங்கள்:

ஆனாலும் கூட சில திருந்தாத ஜென்மங்கள், ஜூலியின் இந்த வீடியோவிற்கும் சம்பந்தமே இல்லாமல் தேவையில்லாத பதிலை பதிவாக வெளியிட்டுள்ளனர். அதனை கண்டித்து சிலர் பதிவிட்டுள்ளனர். பார்ப்போம், இனியாவது ஜூலி மீதான எதிர்மறை எண்ணம் அவர்கள் மத்தியில் இருந்து மாறுகிறதா என.

 

Embedded video

maria juliana@lianajohn28

Just for those who don't respect humanity and others feelings

229

11:24 AM - Mar 14, 2019