ராஜாராணி செண்டிமெண்ட்.. தளபதி 63ல் நயன் நடிக்கும் முதல்காட்சி என்ன தெரியுமா?

சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் இன்று முதல் நயன்தாரா கலந்து கொள்ள இருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால், இப்படம் மீது ரசிகர்களுக்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் தளபதி 63 எனக் குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சென்னையில் தற்போது இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இப்பட படப்பிடிப்பில் நயனும் கலந்து கொள்ள இருக்கிறது. நயன் நடிக்கும் முதல் காட்சி கிண்டியில் உள்ள சர்ச் ஒன்றில் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நயன் மணக்கோலத்தில் கலந்து கொள்கிறார். விஜய் - நயன் திருமணக்காட்சி அது எனத் தெரிகிறது.

ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் நயன் - ஆர்யா நடித்த ராஜாராணி படத்தின் முதல் காட்சியும் சர்ச் ஒன்றில் திருமணம் நடைபெறுவது போல் தான் இருக்கும். அப்படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதும், மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.