இவர் நடந்தால் இடையழகு.. இத்தனை வருடத்திலும் பேரழகு.. மனதெல்லாம் நயன்தாரா

சென்னை: நயன்தாரா .. ஒரு வார்த்தை கேட்க காத்திருந்தேன் என்று பாடத் தோன்றும்.. இந்தப் பெயரைக் கேட்டதுமே.. அந்த தென்றல்தான் இன்று வரை விடாமல் ரசிகர்களின் மனதை வாசமாக்கிக் கொண்டுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயாவில் அறிமுகமானபோது மெல்லின இடுப்பழகி எல்லாம் இல்லை. வல்லினம்தான். போதாதற்கு அடிவயிற்றில் குட்டித் தொப்பை வேறு.. (நோ டா செல்லம்...அதுவும் அழகுதான்!)

ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படத்திலும் அவர் அதே தோற்றத்தில்தான் இருந்தார் என்றாலும் நயன் ரசிகர்கள் பன்மடங்காகப் பெருகினர். நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த கஜினி திரைப்படத்தை திரையில் பார்த்த பின்னர்தான் நயன்தாராவுக்கு தனது உடல் வடிவம் குறித்த ஒரு அக்கறையும் ஆர்வமும் வந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் கூறுகிறார்.

அவர் கூறுகையில், கஜினி படத்தில் முக்கிய நாயகியாக நடித்த நடிகை அசின், நயன் போலவே சின்ன உருவம்தான். ஆனால், நல்ல உடல்வாகு. திரையில் இந்த ஒப்பீட்டைப் பார்த்துதான் நயன் மிகவும் நொந்து போனார். குறிப்பாக மழையில் சூர்யா சண்டை போட்டுக் கொண்டு இருக்க நயன் தப்பித்து ஓடும் காட்சியைப் பார்த்து 'சே... என்ன இவ்ளோ கேவலமா உடம்பை வச்சு இருக்கேனே'ன்னு நயன் மிக வருத்தமாக கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் மாற முடிவு செய்தார்.

கள்வனின் காதலி 
வல்லவன்

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி. அதில் எஸ்.ஜே.சூர்யாவே நயனை குண்டாக இருப்பதாக ஒரு காட்சியில் கலாய்த்து இருப்பார். அடுத்து வந்த வாய்ப்புதான் சிம்புவுடன் நயன் நடித்து வெளியான வல்லவன் படம். சிம்பு உடம்பை குறை என்று ஆலோசனை சொன்னதை கப்பென்று பிடித்துக்கொண்ட நயன், எப்படி உடம்பை குறைப்பது என்று தெரியாமல் பட்டினி கிடந்து பார்த்தாராம்.

 

உடல் சதைகள் டைட்னிங் ஆகலை 
டைட்னிங் ஆகலை

இதனால், அவரது உடல் குறைந்ததே தவிர, உடல் சதைகள் அவ்வளவு டைட்னிங் ஆகலையாம். விழித்துக் கொண்ட நயன், இருக்கவே இருக்கிறது கேரளாவின் இயற்கை முறை அழகு சிகிச்சை என்று கேரளாவுக்கு சென்று முகாமிட்டார். அங்கு போன நேரமோ அல்லது மாயமோ.. சிக்கென மாறி பில்லாவில் பிரமிக்க வைத்தார். தல அஜித்துடன் பில்லா படத்தில் ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு நிகரான ஒரு ஸ்டைலிஷ்! உடை, நடை, பாவனை இந்திய பெண்களுக்கு உண்டான நளினம் என்று ஐயா நயன்தாராவா இது என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்தார் பில்லா நயன்தாரா

மொழுமொழுவென 
டயட் ரகசியம்

இவரின் இந்த ஸ்டைலிஷ் தோற்றத்துக்கு அஜீத் ஒரு முக்கிய காரணம் என்று நயன்தாரா ஒருமுறை சொன்னார். அதன் பிறகு நயனின் ரேஞ்சே மாறிப் போனது. குசேலன், வில்லு என ஒவ்வொரு படத்திலும் அள்ளிக் கொண்டு போனது நயனின் அழகு. முழுவதுமாக மெல்லினம்... இடையில் உடை நிற்காதபடி மெல்லிய இடை என்று நயனின் தோற்றமே அட்டகாசமாகிப் போனது. ராஜா ராணி படத்தில் கொஞ்சம் பூசினாற்போன்று இருந்தாலும் மொழுமொழுவென உடலைப் பராமரிப்பதில் மிக கவனம் காட்டினார் நயன். இவரது டயட் ரகசியம் இதுவரை யாருக்கும் தெரியாது. ஏன் அவரது உதவியாளர்களுக்கே கூட தெரியாதாம்.

 

கோலமாவு கோகிலா 
மெனக்கெட்டார் நயன்

நானும் ரவுடிதான், கோலமாவு கோகிலா என்று கதையில் தனக்கு மிகவும் முக்கிய பாத்திரம் இருப்பது போன்று இப்போது நடித்து வந்தாலும், அறம் படத்தில் முகத்தில் கம்பீரத்தை கொண்டுவர ரொம்பவே மெனக்கெட்டார் நயன். அதுவரை உடலில் காத்து வந்த அந்த நளின தன்மையை மறைத்து விறைப்பை கொண்டுவர மிகவும் கடினப்பட்டு சில உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்த நயன்தாரா அதே சமயம் தான் கட்டிக் காத்து வரும் உடல் நளினம், மெல்லிய உடல்வாகு, சற்றும் கடினதன்மை அடைய கூடாது என்று கத்தியின் மேல் நடப்பது போல தினமும் கவனமாகப் பயிற்சி மேற்கொண்டார்.

 

எப்போதும் இளமையுடன் 
தன்னம்பிக்கைதான் அழகு

வெறும் டயட் மட்டுமல்லாமல் எப்போதும் இளமையுடன், இருப்பதிலும் ஆர்வம் காட்டுபவர் நயன்தாரா. அதனால்தான் சீனியர் நடிகர்கள் முதல் நேற்று வந்த சிவகார்த்திகேயன் வரை அவரால் ஈடு கொடுத்து அசத்த முடிகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்க அவர் தயங்குவதில்லை.. அதற்கு முக்கியக் காரணம் அவரது உடல் அழகு கொடுக்கும் தன்னம்பிக்கைதான் என்றால் அது மிகையில்லை.

வயசு ஆன பிறகும் கூட இந்த ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கட்டும் நயன்.