சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...

சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமணம் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மூத்த மருமகன் 
தனுஷ்

திருமண நிகழ்ச்சியில் ரஜினியின் மூத்த மருமகனான தனுஷ் கலந்து கொண்டார். கடந்த 4 நாட்களாக நடந்து வரும் கொண்டாட்டங்களில் முதல் முறையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் தனுஷ்.

 

சவுந்தர்யா 
விசாகன்

ரோஸ் கலர் பட்டுப்புடவையில் சவுந்தர்யா அழகாக இருந்தார். சவுந்தர்யா, விசாகனின் மணவாழ்க்கை அமோகமாக இருக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

முதல்வர் 
வாழ்த்து

ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் பத்திரிகை வைத்தார். இதையடுத்து அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 

நண்பன் 
கமல் ஹாஸன்

நண்பன் ரஜினியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் கமல் ஹாஸன்.