எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை அகற்ற சொன்ன ரஜினிகாந்த்-ஏன் தெரியுமா

தமிழ் சினிமாவின் 80-90 காலகட்டங்களில் வெளிந்த ஹீரோக்களின் திரைப்படங்களில் ஏதேனும் ஒரு காட்சிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் இடம்பெறும். படத்தின் பாடல் காட்சிகளிலோ அல்லது சண்டை காட்சிகளிலோ அவரது புகைப்படம் இடம் பெறுமாறு காட்சிகளை உருவாக்குவார்கள்.

இதற்கு காரணம் தனது படங்களில் பல நல்ல சமூக கருத்துக்களை பரப்பியதோடு மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறு வாழ்ந்து காட்டி தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.

ஆகையால் அப்போது வந்த படங்களில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றால் காட்சிக்கு உற்சாகம் கிடைக்கும் என்பதும், படத்தை வெற்றியடைய செய்யும் என்பதும் ஒரு நம்பிக்கை. எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை பார்த்தாலே விசிலும், கைத்தட்டலும் திரையரங்குகளை அதிர வைக்கும்.

Third party image reference

குறிப்பாக தமிழ் சினிமாவில் சத்யராஜ், ராமராஜன், பாக்யராஜ், கமல் உட்பட தமிழ் சினிமாவின் மிகப்பெரும் நடிகர்கள் பலர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள். இவர்களது படங்களில் ஏதேனும் ஒரு காட்சிகளில் எம்.ஆரின் புகைப்படங்களோ, அல்லது அவரை இமிடேட் செய்யும்படியான காட்சிகள் 90 % இருக்கும்.

அதன்படி ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த சகலகலா வல்லவன் படத்தின் ஒரு சண்டை காட்சியில் சுவற்றில் எம்.ஜி.ஆர் அவர்களின் போஸ்டர் ஒன்று ஒட்டி இருக்கும். எம்.ஜி.ஆரின் படத்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகத்தில் விசில் அடித்து ஆர்பாட்டம் செய்வார்கள்.

Third party image reference

அதே போலவே ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாயும்புலி படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சியின்போதும் சுவற்றில் எம்.ஜி.ஆரின் படம் ஒட்டப்பட்டிருந்தது.

படப்பிடிப்புக்கு முன்பாக இதை பார்த்த ரஜினி அதனை அகற்ற வேண்டும் என்று கூறினார். ஏன் என்று படக்குழுவினர் கேட்டதற்கு, என் படத்தை பார்க்க வருபவர்கள் என்னை மட்டுமே பார்க்க வேண்டும். எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய மனிதாின் மூலம் பிரபல்யம் அடைய நான் விரும்பவில்லை என்றார் ரஜினி. ரஜினியின் விருப்பத்தை அடுத்து எம்.ஜி.ஆரின் புகைப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.