சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா?

சென்னை: சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்க வேண்டாம்.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண கொண்டாட்டங்கள் 4 நாட்களாக நடந்து வருகின்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த மருமகன் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சு கிளம்பியது.

எந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் அவர் இல்லாததால் இப்படி பேசப்பட்டது.

தனுஷ் 
அசுரன்

மச்சினி திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தனுஷ் புறக்கணிக்கவில்லை. அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் லேட்டாக வந்துள்ளார்.

 

கெட்டப் 
ரகசியம்

தனுஷ் அசுரன் படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். அந்த கெட்டப் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக தான் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கவில்லை. மேலும் வீடியோ எடுக்கும் இடத்திலும் நிற்கவில்லை.

 

வாழ்த்து 
சவுந்தர்யா

சவுந்தர்யாவின் வாழ்வில் ஒரு நல்லது நடக்கும்போது அதை மிஸ் பண்ண தனுஷ் விரும்பவில்லை. அதே சமயம் தொழில் பக்தியால் தனது கெட்டப்பை ரகசியமாக வைக்க குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவில்லை.

 

மருமகன் 
மாமனார்

மாமனார் ரஜினிகாந்த் போன்றே தனுஷும் தொழில் பக்தி அதிகம் உள்ளவர். அதனால் தான் திருமண கொண்டாட்டங்களில் ஓரமாக நிற்கிறார். தான் எந்த புகைப்படங்களிலும் இல்லாவிட்டால் இப்படி ஒரு பேச்சு கிளம்பும் என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. இருப்பினும் தொழில் முக்கியமாச்சே. அதனால் தான் அப்படி செய்துள்ளார்.