பேட்ட யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் ரிலீசாகி படம் படுஜோராக பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்கள் முழுக்க ஒரே திருவிழாக்கோலம் தான்.

அஜித் மற்றும் ரஜினி படம் ஒரே நாளில் ரிலீசாகி ஓடினாலும் பேட்டய பற்றித்தான் எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, பொதுவாக சினிமா ரசிகர்கள் எல்லோருமே பேட்டய புகழ்நது தள்ளுவதற்குக் காரணமே ரஜினி தன்னுடைய பழைய ஸ்டைல் முழுக்கவும் ஒட்டுமொத்தமாக திரும்பக் கொண்டு வந்திருக்கார் என்பது தான்.

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? பேட்ட ஸ்டைல் பேஷன்

அப்படி இவ்வளவு வயதைக் கடந்த பின்னும் தன்னுடைய இளமைக்காலப் படங்களில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு ஸ்டைல் அதிகரித்திருப்பதற்குக் காரணம் அவருடைய டிரஸ், பேஷன் ஸ்டைல் தான். பேட்ட வேலுவாக இருக்கும்போது மாஸ் காட்டும் ரஜினியாகவும் காளியாக இருக்கும்போது ஸ்டைலில் அனைவரையும் சொக்க வைக்கும் ஆனாக இருக்கும் போது அவர் அணிந்திருக்கும் ஸ்டைலிஷ் ஆடைகளும் தான். அப்படி ஸ்டைலிஷான ஆடைகளை வடிவமைத்தது யார்? அப்படி டிரெண்டிங்காக அவர் அணிந்திருக்கும் ஆடைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
ரஜினி அறிமுக ஆடை

ரஜினிக்கு கல்லூரிக்கு நேர்முகத்தேர்வுக்கு வருகிற பொழுது அவர் அணிந்திருக்கும் பேண்ட், சட்டை மற்றும் மஃப்ளர் காம்போ 40 வருடத்துக்கு முன்னால் தன்னுடைய இளமைக்காலத்தில் அணிந்து பட்டையைக் கிளப்பிய பேண்ட் மாடல். அந்த டெட்ரோ மாடல் பேண்டில் மரணம் மாஸ் மரணம் பாடல் உண்மையிலேயே மாஸ் மரணம் தான்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
ரஜினி ஸ்வெட்டர்கள் கலெக்ஷன்

பொதுவாக மலைப்பிரதேசங்களில் வாழ்வதாக வருகின்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கருப்பு, பிரௌன், சாம்பல் நிற ஸ்வெட்டர்களைத் திரும்பத் திரும்ப அணிந்து கொள்வார்கள். கழுத்தில் ஒரு சால்வை அணிந்திருப்பார்கள். கலர்ஃபுல்லாக என்றால் அதிகபட்சமாக பர்ப்பிள் கலர் அவ்வளவுதான்.

ஆனால் பேட்ட படத்தில் ரஜினி அணிந்து வருகிற ஸ்வெட்டர் கலெக்ஷன்களும் அதனுடைய கலர் காமினேஷன்களும் அப்படியே நம்முடைய மனதை இழுக்கிறது. பாருங்கள். 96 த்ரிஷா போட்டிருக்கும் மஞ்சள் டிரெஸை எப்படி தேடி அலைந்தார்களோ அதைவிட அதிகமாக ரஜினி போட்டிருக்கும் மெரூன், பிளாக், மஸ்டர்டு யெல்லோ என தேடி கடை கடையாய் ஏறி அலையப் போகிறார்கள்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
ஸ்ரக்

ரொமாண்டிக் அண்ட் பொயடிக்கான ரஜினியாக இருக்கின்ற வரையிலும் அவர் அணிந்திருக்கிற டிரஸ் கலெக்ஷன் ஒரு மாதிரியான ஸ்டைலாக இருந்தாலும் தான் தன்னுடைய தங்கை மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான துணிந்து முடிவெடுத்து அதன்பின், உபி செல்கின்ற சமயங்களில் அவருக்காக தேர்வு செய்யப்படும் ஆடைகளும் நீளமாக ஷிப்பாவும், தோளில் ஒரு சால்வையும் அணிந்து படா மாஸ் காட்டுகிறார் ரஜினி.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
அழுக்கு ஷிப்பா

கடைசியாக கிளைமேக்ஸ் காட்சிகள் நெருங்குகிற வேளையில் அவர் அணிந்திருக்கும் லேசாக பழுப்பு வெள்ளை நிறத்தில் அணிந்திருக்கும் உல்லன் ஷிப்பா அவருடைய ஸ்டைலை இன்னும் கொஞ்சம் தூக்கலாகவே காட்டுகிறது. அந்த டிரஸ்ஸில் ரஜினியைப் பார்த்து மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
வில்லன் சிங்காரம் ஆடை

வில்லன் சிங்காரத்தின் ஆடைகள் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பிளாஷ்பேக்கில் இளமைக் காலத்தில் வரும் சிங்காரம் பூப்போட்ட சில்க் சட்டை போட்டுக் கொண்டு காமெமடி பீஸ் போல இருப்பான். ஆனால் அவன்தான் பின்னாளில் மிகப்பெரிய வில்லனாக உருவெடுக்கப் போகிறான் என்பது யாருமே நினைத்துப் பார்க்க முடியாத ட்டுவிஸ்ட் தான். அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுத்தது அந்த டிரஸ் தான். அதே அம்மாஞ்சி தான் வில்லனாக அணிந்திருக்கும் ஆமைகளில் ஒரு பணக்கார வில்லனின் தோற்றம் கிடைத்திருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
சிம்ரன் ஆடைகள்

Image Courtesy

சிம்ரனை முதல்முறை அறிமுகம் செய்கிற பொழுது அவர் அணிந்திருக்கும் லைட் ப்ளூ த்ரீ ஃபோர்த் ஜேீன்ஸ் மற்றும் டாப் கொள்ளை அழகு. ஒரு காலேஜ் கேர்ளின் அம்மா என்றால் யாராலும் நம்ப முடியாத ஒரு அழகு.

அதேபோல் அவர் தொடர்ந்து அணிந்திருக்கும் மெரூன், ஒயிட் லாங் ஸ்ரக்குகள் சிம்ரனை இன்னும் யங்காகவும் அதே சமயம் அவருடைய கிளாமரான தோற்றத்தை மறைப்பதற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
விஜய் சேதுபதி டிரஸ்

வில்லன் சிங்காரத்தின் மகனாக வருகிறார் விஜய் சேதுபதி. அவர் உத்திர பிரதேசத்தில் மதத்தின் பெயரால் ரௌடிசம் செய்து கொண்டிருக்கும் ஒரு தமிழ் ரௌடி. அதற்கு ஏற்றபடி வடநாட்டு ரௌடி தொனியிலான பெரிய ஜிப்பா சட்டைகளும் அதன் நிறங்கள் பெரும்பாலும் பச்சை மற்றும் பிரௌன் கலராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மாஸ் வில்லன், ஜாலி வில்லன் என நாம் பார்த்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆடைகள் பெரிதாக வில்லன் தொனிக்கு பொருந்தவில்லை. வடநாட்டு ரௌடி என்பதற்காக மட்டுமே அந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
பாபி சிம்ஹா அவுட் ஃபிட்

Image Courtesy

பாபி சிம்ஹா நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய சாமிங் க்யூட் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கான ஆடை தேர்வுகள் என்பதும் அசலான ஒரு வசதியான வீட்டுப் பையனாகவும் அதேசமயம காலேஜ் செல்லும் இளைஞன் கெட்டப்புக்கு சிறிதும் குறைவில்லாமல் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
சசிகுமார் ஆடைகள்

Image Courtesy

தாடி வைத்திருப்பதற்காகவே இஸ்லாமியர் கேரக்டர் வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டது போல் இருந்தது. படத்தில் ஒரு இந்துவோடு சகோதரத்துவம் பாராட்டும் இல்லாமிய இளைஞனாகவே இருக்கும் அவருக்கான ஒடைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சுப்பிரமணிய புரத்தில் அவர் ரெட்ரோ பேண்ட் அணிந்திருந்தாலும் கூட பேட்ட படத்தில் அவருடைய கதாபாத்திரத்துக்கு ஏற்றது போல் பெரிதாக சூட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 

'பேட்ட' யில ரஜினி போட்ற டிரஸ் உங்களுக்கு பிடிச்சிருக்கா? யார் டிசைன் பண்ணது தெரியுமா? 
யார் வடிவமைத்தது?

Image Courtesy

எல்லாம் இருக்கட்டும். ரஜினி, சிம்ரனுக்கான உடைகளை வடிவமைத்தது யார் என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கா இல்லையா? அவருடைய ஆடைகள் முழுக்க வடிவமைத்தது ஒரு பெண் தான். நிஹாரிகா கான். இவர் ஒரு பேஷன் டிசைனர்.

பாலிவுட் படங்களில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதல் படம் கொயோ கொயோ சந்த் (2007) என்பது தான். நிறைய படங்களில் இவர் வேலை செய்திருந்தாலும் இவருடைய திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வந்தது என்றால் அது வித்யாபாலன் நடித்து மிகப்பிரபலமான படமான டர்ட்டி பிக்சர் படம். ஆம். அந்த படத்தில் வித்யாபாலனுக்கான ஆடைகளை வடிவமைத்தது இவர் தான்.

அதற்கான 2011 இல் தேசிய விருதும் 2012 இல் பிலிம் பேர் அவார்டு மற்றும் ஐஐஎஃப்ஏ விருதுகளும் பெற்றிருக்கிறார்.

இவர் வேலை செய்த முதல் தமிழ்ப்படம் சூப்பர் ஸ்டாரின் பேட்ட தான். என்ன ரஜினிக்கும் சிம்ரனுக்கும் கொடுத்த முக்கியத்துவம் போல் மற்ற கதாநாயகர்களுக்கு சிரத்தை எடுத்துக் கொள்ளாததை தவிர பெரிதான ஒன்றும் குறை சொல்லிவிட முடியாது.