விஸ்வாசம் பற்றிய அஜித் ரசிகர்களின் மன நிலை இது தான்

சென்னை: வியாழக்கிழமை வந்தால் தல ரசிகர்களின் நிலைமை பரிதாபமாகிவிடுகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. ஆனால் படம் குறித்த அப்டேட் தருவேனா என்று தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சிவா அடம் பிடிக்கிறார்கள்.

இந்நிலையில் வழக்கம் போன்று இந்த வியாழனும் டீஸர் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

பாவம் 
வியாழக்கிழமை

வியாழக்கிழமையானால் போதும் விஸ்வாசம் டீஸர் வருகிறது, அனைவரும் தயாராகுங்கள், கொண்டாடலாம் என்று அஜித் ரசிகர்கள் உற்சாகமாகிவிடுகிறார்கள். நீ விடிய விடிய கதறினாலும் டீஸரை விட மாட்டேனே என்று தயாரிப்பு தரப்பு அடம்பிடிக்கிறது. இப்படியே ஒவ்வொரு வியாழனும் செல்கிறது.

எதிர்பார்ப்பு 
டீஸர்

இன்று கண்டிப்பாக டீஸர் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் #ViswasamTeaser என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை.

 

போலி ஐடிகள் 
விஸ்வாசம்

விஸ்வாசம் டீஸர் இன்று வெளியாகிறது என்று சத்யஜோதி பிலிம்ஸ் பெயரில் போலி ஐடிகளை உருவாக்கி வேறு சிலர் ட்வீட்டுகிறார்கள். ஆனால் தல ரசிகர்கள் ரொம்ப பாவம்.

 

கலாய் 
மீம்ஸ்

தல ரசிகர்களின் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளதே

 

Embedded video

Dr.Lee Chandler@kandaknd

Meanwhile @SathyaJyothi_ to thala fans

74

3:09 PM - Dec 6, 2018

31 people are talking about this