மரண மாஸ்: ஊரே அனிருத்தை கலாய்க்கிறது, எஸ்.பி.பி. என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

சென்னை: ஊரே எஸ்.பி.பி.க்காக பாவப்படும் போது மரண மாஸ் பாடல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பேட்ட படத்தில் வரும் மரண மாஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானதில் இருந்து அது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. காரணம் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இரண்டு வரி மட்டும் தான் கொடுத்துள்ளார் அனிருத்.

இந்நிலையில் இது குறித்து எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

ரஜினி 
மகிழ்ச்சி

நீண்ட காலம் கழித்து ரஜினிகாந்துக்காக பாடல் பாடியதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த பாட்டில் என் போர்ஷன் குறைவு. ஆனால் அது எனக்கு பிரச்சனை இல்லை. நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று பேட்ட படக்குழு நினைத்தது. நான் அந்த பாடலை பாடியதில் மகிழ்ச்சி. அந்த பாடல் மிகவும் பிரபலமாகும் என்று நினைக்கிறேன் என்கிறார் எஸ்.பி.பி.

 

ரசிகர்கள் 
வருத்தம்

மரண மாஸ் பாடலில் எஸ்.பி.பி.யின் குரலை கேட்டும் காதில் தேன் வந்து பாய்ந்தது போன்று இருந்தது ரசிகர்களுக்கு. ஆனால் மேலே, கீழே என்று இரண்டு வரியுடன் அவர் போர்ஷன் முடிந்தது ரசிகர்களுக்கு கவலை அளித்தது.

 

 

சமூக வலைதளங்கள் 
மீம்ஸ்

சமூக வலைதளங்கள் பக்கம் போனாலே எஸ்.பி.பி.யை ஏமாற்றிவிட்டார் அனிருத் என்று கூறி அவரை கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள், விமர்சிக்கிறார்கள். ஆனால் எஸ்.பி.பி.யோ இரண்டு வாரி பாடியதிலேயே திருப்தி அடைந்துள்ளார். பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்.

 

View image on Twitter

View image on Twitter

gangaiamaren@me.com@gangaiamaren

 

1,858

9:17 PM - Dec 4, 2018

209 people are talking about this

Twitter Ads info and privacy

View image on Twitter

View image on Twitter

gangaiamaren@me.com@gangaiamaren

 

1,858

9:17 PM - Dec 4, 2018

209 people are talking about this

Twitter Ads info and privacy

பேட்ட 
பொங்கல்

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்த படத்துடன் அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களும் ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.