வேணாம் அஜித்துடன் இந்த பலப்பரிட்சை :தேதி குறித்த ரஜினி

கூட்டமா வர்றதெல்லாம் பன்னிங்க’ என்று ரஜினியே திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால் அவர் படத்தை மட்டும் அடுத்தடுத்து வெளியிடுவது எந்த வகையில் சேர்த்தி என்று கடுங்காப்பி கலரில் கவலைப்படுகிறார்கள் சில பல பொது புத்தி ரசிகர்கள். பொதுவாகவே ரஜினி நடித்த படங்கள் ரஜினியின் நெடுங்கால தவத்திற்கு பின் அருளி வருவதுதான் வழக்கம். ஆனால் கபாலி வந்த கையோடு காலாவும் வந்து, காலா வந்த கையோடு 2பாயின்ட்0 வும் வந்து, ரஜினி என்ற மகா அவதாரத்தை, மலிவு விலை மைதா மாவாக்கிவிட்டதோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

இந்த வருத்தம் அவரது வெறிபிடித்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். டிமாண்ட் அன்டு சேல்ஸ் என்ற தத்துவப்படி பார்த்தால், அது சரியில்லையல்லவா? விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் ரஜினி படங்களை குறைந்த பட்சம் ஆறு மாத இடைவெளிகளில் வெளியிடுவதுதான் நல்லது என்கிறார்கள்.

போகட்டும்… விஷயத்துக்கு வருவோம். 2பாயின்ட்0 திரைக்கு வந்து சில நாட்களே உள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படத்தை ரிலீஸ் செய்வோம் என்று மல்லுக்கட்டி வருகிறது தயாரிப்பு நிறுவனமான சன். அஜித்துடன் மோத வேண்டாம் .அவர் நல்ல மனிதர் அதுமட்டும் இல்லாமல் சோ   ரஜினிக்கே விருப்பம் இல்லை என்று தகவல்கள் வருகின்றன. அவரே ‘படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டாம். ஏப்ரல் 14 ந் தேதி வெளியிடலாம்’ என்று யோசனை சொன்னாராம்.

அதை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா? என்ற யோசனை நிலவி வருகிறதாம். வரும்… ஆனா வராது என்பதுதான் இப்போதைய திட்டவட்டமான குழப்பம்!