பாவம், டாப் ஸ்டார் பிரசாந்த் இப்படி சைட் ஸ்டார் ஆகிவிட்டாரே

சென்னை: நடிகர் பிரசாந்த் ராம் சரண் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் பொயாபதி சீனு இயக்கியுள்ள படம் வினய விதய ராமா. இப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதற்கான காரணம், நடிகர் பிரசாந்த் துணை நடிகர் போன்று ராம் சரண் பின்னால் வருவது தான்.

இப்படத்தில் நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் ராம் சரண் நடந்துவரும்போது பின்னால் வரும் நான்கு பேர்களில் ஒருவராக நடந்து வருகிறார்.

வின்னர், லண்டன் போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு பிரசாந்துக்கு பெரிய ஹிட் எதுவும் இல்லை. வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பிரசாந்த்.

அடுத்ததாக வெளியாக உள்ள ஜானி திரைப்படத்தின் டீசர் பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில், ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக விஜய் அஜித்துக்கு போட்டியாக இருந்த நடிகரின் நிலை இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் வேதனைப் படுகின்றனர்.