27-ம் தேதிவரை ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டு கேட்டை ஆட்டக்கூடாது... இடைக்காலத் தடை சர்கார் இயக்குநர்

சர்கார் பட விவகாரத்தில் போலிஸார் தன்னை எந்தநேரத்திலும் கைது செய்யக்கூடும் என்று கூறி முன் ஜாமீனுக்கு அப்பீல் செய்திருந்த முருகதாஸை வரும் நவம்பர் 27ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதே சமயம் விசாரணைக்கு போலிஸார் அழைத்தால் அவர்களுக்கு முருகதாஸ் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது.

 

 

முன்னதாக, போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன் மீது புகார் இருப்பதால், தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படியும் முருகதாஸ் கோரியிருந்தார்.

 

அந்த மனு மீதான விசாரணை சற்றுமுன்னர் நடந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், 'சினிமாவை சினிமாவாகப் பாருங்கள். இலவச மிக்ஸி, கிரண்டர்கள் எரிக்கப்பட்டதற்குப் பதில் இலவச டி.வியை எரித்திருந்தால் உங்களுக்கு சம்மதமா? படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டதாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் முருகதாஸை கைது செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை' என்று கூறி அடுத்த விசாரனையை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.