நோ நெவர்...சர்கார் ல சிங்கிள் ஷாட்டைக் கட் பண்ணமுடியாது... அடம்பிடிக்கும் தமிழ்ராக்கன்ஸ்

முதல்முறை சென்ஸார் பெற்ற, சர்காரின் ஒரிஜினல் 2 மணிநேர 46 நிமிடப் படத்தை இனி விஜய்யும் முருகதாஸும் பார்க்கவிரும்பினால் கூட அவர்கள் செல்லவேண்டிய இடம் டபுள்யுடபுள்யுடபுள்யு டாட் தமிழ்ராக்கர்ஸ் டாட் காம்தான். 'என்ன கொடுமை சரவணா' என்கிறீர்களா? அதையும் தாண்டிய கொடுமை ஒன்றையும் தெரிந்துகொள்ளுங்கள்.

 

'சர்கார்' இன்று சர்வதேச புகழ்பெற்ற படம் என்பதால் உலகம் முழுமையுமுள்ள பத்திரிகைகளில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறது. அந்த வரிசையில் கலிஃபோர்னியாவில் இருந்து வெளிவரும் 'த இண்டர்நேஷனல் அண்டப்புழுகு' என்கிற பத்திரிகை 'சர்கார்' குறித்து ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன் விபரீத விபரம் வருமாறு...

 

தங்களது தகிடுதத்த வேலைகளால் விஜயையும் ஏ.ஆர்.முருகதாஸையும் வழிக்குக் கொண்டு வந்த தமிழக அமைச்சர்கள் தமிழ்ராக்கர்ஸின் அட்மின்களைத் தொடர்புகொண்டு, நாங்க மறு சென்ஸார் பண்ணுன அத்தனை காட்சிகளையும் நீங்களும் நீக்கணும். ஏன்னா எப்பவும் தியேட்டர்ல படம் பாக்குற ஜனங்களை விட உங்க வெப்சைட்ல பாக்குற ஜனங்க அதிகம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க. வேணும்னா நாங்க வாங்குன சூட்கேஸ்கள்ல ஒண்ணுரெண்டைக்கூட அனுப்பிவைக்கிறோம்' என்று வேண்டுகோள் வைத்தார்களாம்.

 

அதைக்கேட்டு கடும்கோபமடைந்த மிஸ்டர் தமிழ்ராக்கன்ஸ் அட்மின், ''நாங்க செய்யிற தொழில் வேணும்னா தப்பானதா இருக்கலாம். ஆனா செய்ற தப்பையும் சரியா செய்யணும்னு நினக்கிறவங்க நாங்க' என்று விஜய் போலவே பஞ்ச் பேசிவிட்டு படத்தில் சிங்கிள் ஷாட்டைக் கூட நீக்கமுடியாது என்று மறுத்துவிட்டார்களாம். பண்ற தொழில் மேல ஒரு பக்தி இருக்கணும்னு சொல்வாங்களே அது உங்ககிட்ட கச்சிதமா இருக்கு. வெல்டன் தமிழ்ராக்கன்ஸ்...