வெற்றி கூட்டணியிடன் கை கோர்க்கும் அஜித் : அஜித்தின் அடுத்த பட அப்டேட்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் தொடர்ந்து சிவாவுடனே தான் பணியாற்றி வருகிறார். இது ஒரு சில ரசிகர்களுக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல வருடமாக விஷ்ணுவர்தன் கையில் வைத்து சுத்தி வந்த வரலாற்று கதை ஒன்றில் அஜித் நடிக்க சம்மதித்துள்ளாராம்.

இப்படத்தை குலேபகாவலி, அறம் ஆகிய படங்களை தயாரித்த கே ஜி ஆர் ஸ்டுடியோ தான் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கம் போல் படத்திற்கு இசை யுவன் தானாம்.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஏனென்றால் அஜித் வினோத் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். அதிரகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்.